பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

433


மிகவும் கருத்தாழங் கொண்டன; படித்துப் படித்து இன்புறத் தககன. .

பாண்டரங் கண்ணனார் 16

பாண்டரங்கம் என்பது கூத்து வகையுள் ஒன்றாகும். கண்ணனார் என்னும் இவர் அக் கூத்தில் வல்லவராதலின் இப் பெயர் பெற்றனர் எனலாம். இவராற் பாடப் பெற்றோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆவான். இவன் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி காலத்தவன். ஒளவையாராற் பாடப் பெற்றவன். ஆதலின் இவரையும் அக் காலத்தவர் எனலாம். கிள்ளியின் களிற்றுப்படை பகைவேந்தரது நாட்டைக் கலக்கி வெற்றிகொண்ட சிறப்பை இச் செய்யுளில் இவர் பாடுகின்றார்.

பாண்டியன் அறிவுடைநம்பி 188

இவன் பாண்டியர் குடியினன். அறிவாற்றலிற் சிறந்தோனா தலின் இப் பெயரைப் பெற்றனன். 'மக்கட்பேறு வாழ்விற்கு எவ்வளவு முதன்மையானது என்பதனை, இவனது செய்யுளால் அறியலாம். இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளனர் (184)

இவன் வரலாற்றுப் புகழ்பெற்ற பாண்டியருள் ஒருவன் தமிழகத்துப் படையெடுத்து வந்து ஆரியப் படையினரை அழித்துப் புகழ்பெற்றவன். இவ்வாரியப் படையினர் மோரியர் ஆகலாம். இச் செய்யுளில், இவன் கல்வியின் சிறப்பைப் பற்றிய மிகவும் திட்பமான கருத்துக்களை எடுத்துக் கூறுகின்றான்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற

நெடுஞ்செழியன் 72

இவனும் புகழ்மிக்கபாண்டியருள் ஒருவன்.பாடப்பட்டோர் வரலாற்றுள் இவனைப் பற்றிய பிற செய்திகளைக் காண்க. இச் செய்யுள், இவன் போர்முகத்துக் கூறிய வஞ்சினம் ஆகும். 'கொடியன் எம் இறையெனக் கண்ணிர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக' என்பதிலிருந்து, இவனது ஆட்சிப் சிறப்பை நாம் அறியலாம். பல்வகை மேம்பாடுகளும் ஒருங்கமையச் சிறப்புற்றிருந்தவன் இவன். பாரதம் பாடிய பெருந்தேவனார்: கடவுள் வாழ்த்து

இவர் பாரதக் கதையைத் தமிழிற் பாடியவர். அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய தொகை நூற்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியவர். இதனால், அத் தொகை நூற்கள் தொகுக்கப் பெற்ற காலத்தையோ, அதற்குப் பிற்பட்ட காலத்தையோ சேர்ந்தவர் எனலாம்.