பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

435


புல்லாற்றுர் எயிற்றியனார் 213

இவர் புல்லாற்றுாரினர்; எயினர் குடியினைச் சார்ந்தவர். கோப்பெருஞ் சோழன் தனக்கு மாறுபட்ட தன்மக்களை ஒழித்தற்குப் படையெடுத்த போது, அவனுக்கு நிலையாமையின் உண்மையை உரைத்து, அதனின்றும் விலக்கியவர். இதன் பின்னரே, இவன் வடக்கிருந்தான் ஆகலாம். பிசிராந்தையார், பொத்தியார் போன்ற பெரும் புலவர்களின் காலத்தவர் இவர். 'எயிற்றியார் எனவும் இவர் பெயர் வழங்கும்.

புறத்திணை நன்னாகனார்

நன்னாகனார் என்னும் தலைப்பில் இவரைப் பற்றிய குறிப்புக்களைக் காண்க. .

பூங்கண் உத்திரையார் 277

இச் செய்யுளோடு குறுந்தொகையின் 48, 171 ஆம் செய்யுட்களையும் செய்தவர் இவர். இவர் பெண்பாலர், உத்திர ஒரையிற் பிறந்தவர் ஆகலாம்; 'பூங்கண் உறுப்பால் வந்த அடைமொழி எனலாம். இச் செய்யுள் உவகைக்கலுழ்ச்சித் துறைச் செய்யுட்களுள் மிகவும் நயமுடைய செய்யுளாகும். முதியோள் கூந்தலது நரையினை, மீனுண் கொக்கின் துரவியன்ன வால் நரைக் கூந்தல்' என்பார். களிறு எறிந்து பட்டனன் மகன் என்னும்போது, அம் முதுதாய் கொண்ட உவகைக்கு 'ஈன்ற ஞான்றினும் பெரிதே உவகை என்கின்றார். ஆனால், அடுத்து அவனை இழந்த துயரமும் வருத்த, அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. நோன் கழை துயல் வரும் வெதிரத்து வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே, கண்ணிர் என அதனையும் உருக்கமுடன் கூறுகின்றார் இவர்.

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு 246

இவர் பூதப் பாண்டியனின் தேவியார் ஆவர். அவன் போர்க்களத்தே இறந்தானாகத் தாமும் எரியில் மூழ்கி உயிர்விடத் துணிந்தார் இவர். அதனைத் தடுக்க முயன்றனர் சான்றோர். அவர்க்கு இவர் கூறும் விடையாக அமைந்த இச் செய்யுள், இவரது கற்புத் திண்மையையும், புலமை நலத்தையும், உள்ளத் தெளிவையும் உணர்த்துவதாகும். .

பெருங்குன்றுர் கிழார் 147, 210, 211, 266, 318

அகநானூற்று 8 ஆம் செய்யுளும், குறுந்தொகையின் 338 ஆம் செய்யுளும், நற்றிணையின் 5,112,19,347 ஆம் செய்யுட்களும், பதிற்றுப்பத்துள் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பத்துச் செய்யுட்களும் (ஒன்பதாம் பத்து) இவராற் செய்யப் பெற்றனவாம். பெருங்குன்றுர் வேளாண் குடியினர் இவர். சிறந்த