பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

புறநானூறு - மூலமும் உரையும்


பெரும் புலமையும் தெளிவும் உடையவர். இவராற் பாடப் பெற்றோர்வையாவிக் கோப்பெரும் பேகன், சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை, சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்போராவர். இவர்காலப் புலவர்கள் சிறு மேதாவியார், சேந்தம் பூதனார், அறிவுடையரனார், நல்லந்துவனார், மருதனின நாகனார், நக்கீரனார், பரணர் முதலியோராவர்.

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்

இவர் பெருங்கோழி நாய்கன் என்பாரின் மகள். போர்வைக் கோப் பெருநற்கிள்ளியைக் காதலித்தவர்; இவரைப் பற்றிய குறிப்புக்களை நக்கண்ணையார் என்ற பகுதியிற் காண்க.

பெருஞ்சித்திரனார் 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238. -

சித்திரனார் இவர் பெயர் பெருமை இவரது தகுதி நோக்கி அமைந்த சிறப்புப் பெயராகும். சித்திரை ஒரையிற் பிறந்தவர் ஆகலாம். வள்ளல் குமணனைப் பாடிப் போற்றி, அவனது தலைதந்த பெருங்கொடைப் பண்பை எடுத்துக் கூறி, அழியாப் புகழை நிலை பெறுத்தியவர் இவர். வெளிமான் துஞ்சியபின் இளவெளிமானிடம் சென்று, அவனுக்கு அறிவு கொளுத்தக் குமணன் தந்த களிற்றை அவனது காவன் மரத்திற்கட்டி, அவனுக்கு அறிவுரை வழங்கிய செயல் இவரது தறுகண்மையினைக் காட்டுவதாகும். அதியமான் நெடுமான் அஞ்சி, இவரைக் கண்டு பாராட்டாதே கொடுத்த பரிசிலை ஏற்க் மறுத்து, ‘காணாது ஈத்த இப் பொருட்கு, யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்' என்று கூறியவர் இவர். இதனால் இவரது புலமையுள்ளம் எத்துணைத் திண்மையானது என்பது விளங்கும். 'புவி பார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின், எலி பார்த்து ஒற்றாதாகும் (புறம் 237): என்ற உறுதியோடு வாழ்ந்தவர் இவர் பொருட் செறிவும், உள்ளத் தெளிவும் அமையச் சிறந்த செய்யுட்களைச் செய்தவர். வறுமையினும், தான் பெற்ற பிள்ளையை, 'மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும் தேற்றும் தாயைக் காட்டும் இவரது செய்யுளால், இவர் குடும்பம் முதற்கண் வறுமையில் உழந்து வாடிய நிலையும், அதுகாலையும் பொறுமையோடு மக்களைப் பேணிய இவர் மனைவியது குடும்பப் பண்பும் விளங்கும். பெருந்தலைச் சாத்தனார் 151, 164, 165, 205, 209, 294

அகநானூற்றுள் இரண்டும், நற்றிணையுள் ஒன்றும் இவர் பாடிய பிற செய்யுட்கள். இவர் சாத்தனார் என்னும் பெயரினர்; பெருந்தலை என்பது தலைமை காரணமாக வந்த பெயராகலாம். தென்னவன் மறவனான கோடைப் பொருநனைப் பற்றி