பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

437


அகநானூற்றுச் செய்யுளுள் (13) இவர் மிகவும் அருமையாக எடுத்துக் கூறுகின்றார். மணலில் தலைவனின் தேர் ஒலியோடு வருதலை நயமாக, திரிமரக் குரலிசை கடுப்ப, வரிமணல் அலங்குகதிர்த் திகிரி யாழி போழ வருங்கொல் தோழி’ என (அகம்.224) உவமித்தவர் இவர். கருவிளையின் மலர் காற்றிலாடுவதனை, ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல் வர' என்றும் நயமாகக் கூறுவர். 'ஆடுநனி மறந்த எனத்தொடங்கும் இவரது புறப்பாட்டு, இவரது வறுமை நிலையை விளக்கும். 'மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே என்னும் வாக்கு இவரதேயாகும் (புறம் 165). முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலம்’ என்பது, வறுமையினும் செம்மைமிக்க இவரது பண்பை உயர்த்தும் (புறம் 205). -

பெரும் பதுமனார் 199

பதுமனார் என்பது இவர் பெயர் பெருமை இவரது கல்வி நலத்தால் ஏற்பட்டது. குறுந்தொகையின் ஏழாவது செய்யுளும், நற்றிணையின் 2, 109 ஆம் செய்யுட்களும் இவர் செய்தவாக வழங்கும். 'ஆரியர் கயிறாடு பலகையிற் கால் பொரக் கலங்கி’ என்னும் வாக்கு (குறு. 7) இவரை ஆரியக் கூத்தருள் ஒருவர் எனக் காட்டும். இவ்வாறே, காதலனைப் பிரிந்த பிரிவுத் துயரால் நலியும் தலைவியது நிலையினை, இம்மென இசைக்கும் வாடை இருள்கூர் பொழுதில் துளியுடைத் தொழுவில், துணிதல் அற்றத்து, உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலையை (நற்109) உவமானமாகக் காட்டுவர் இவர். இதனால், ஆக்களைப் பேணிக் காக்கும் தன்மையை நன்கு அறிந்தவரும் இவராகலாம். ஆலமரத்தைக் கடவுள் ஆலம்' என்பதனால், இவர் கல்லால நீழலின்கீழ் நால்வருக்கு அறமுரைத்த சிவபிரானை வழிபடும் மரபினர் ஆகலாம்.

பேய்மகள் இளவெயினியார் 11

இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப் பாடியவர். இளவெயினியார் என்பது இவரது குடிப்பெயர். இளமையிலேயே இறந்து, பின் பேய் வடிவினைப் பெற்றனர் போலும். சேரமானின் மறத்திறத்தையும் கொடைத்திறத்தையும் இவர் போற்றிப் பாடியுள்ளனர். 'ஒவ்வொருவரும் இவனைப் பாடிப் பரிசில் பெற்றனர், ஆயின் யானே, காணற்கு இயலாப் பேயுருவினளாதலின் யாதும் பெற்றிலேன்' என்று இரங்குவது போலப், பாடல் அமைந் திருப்பதையும் கவனிக்கவும்.