பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

புறநானூறு - மூலமும் உரையும்


பேராலவாயார் 247, 262

இவரை மதுரைப் பேராவாயார் எனவும் உரைப்பர். ஆலவ்ாயார் என்னும் பெயரோடு விளங்கும் இவரது இயற்பெயர் தெரிந்திலது. அகநானூற்று 88, 296 ஆம் செய்யுட்களும், நற்றிணையின் 51, 361 ஆம் செய்யுட்களும் இவர் பெயரான் வழங்கும். பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தீப்பாய்ந்த காட்சியை இவரது செய்யுள் (247) மிக உருக்கமாக எடுத்துக் கூறுகின்றது. 'குடுமி நெற்றி நெடுமரச் சேவல் தலைக்குரல் விடியல் (அகம்.87) என, வைகறை பற்றிக் கூறுவது சிறப்பானது. கொற்கைப் பொருநனான நெடுந்தேர்ச் செழியனின் கூடல்வளத்தையும் இவர் அழகாகப் பாடியுள்ளனர் (அகம் 296). இவருடைய செய்யுட்களுள் இனிய காட்சிகள் பல மிகச்சுவையோடு பொருள் விளக்க எழுத்தாளப்பட்டிருக்கும் சிறப்பைக் காணலாம்.

பேரி சாத்தனார் 125, 198

வடம் வண்ணக்கண் பேரி சாத்தனார் எனவும் இவர் பெயர் காணப்படும். அகநானூற்றுள் 5, குறுந்தொகையுள் 5, நற்றிணையுள் 8 செய்யுட்களையும் செய்தவர் இவர். கடலலையின் ஒலிக்கு முழவின் ஒலியை உவமித்த சிறப்பால், 'பேரி என்னும் அடைமொழி பெற்றவர். இவரது இயற்பெயர் சாத்தனார் என்பது; 'வண்ணக்கண்' என்பது அரசகருமத்துள் ஒன்று. கூவுங் கண்ணது எம் ஊர்” என நாட்டுப் பேச்சு வழக்கைத் தம் செய்யுளில் அமைத்துள்ளனர் (அகம். 83). இவருடைய குறிஞ்சித்திணைச் செய்யுட்கள் மலைவளத்தினது மாண்பை மிகமிக நன்றாக எடுத்துக் காட்டுவன. காதலரது கலந்த உறவைப், பல்படை நிவந்த வறுமையில் சேக்கைப் பருகுவன்ன காதலொடு திருகி, மெய்புகுவன்ன கைகவர் முயக்கத்து, ஒருயிர் மாக்கள் (அகம் 305) என இனிமையாக உரைத்தவர் இவர், கடலும் கானலும் தோன்றும் நிலையை இரவும் நிலவும் போல என உவமித்துள்ளனர் (குறு.18). 'பொங்கு பிசிர் முழவிசைப் புணரி எழுதரும் உடைகடற் படப்பை எம் உறைவுஇன் ஊர்க்கே என உவமித்துள்ளனர் (நற்.67). 'வில்லெறி பஞ்சிபோல மல்குதிரை வளிபொரு வயங்கு பிசிர் பொங்கும் (நற்.299) எனப் பஞ்சு கொட்டுதலை எடுத்துக்காட்டி உவமித்துள்ளனர். பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன என (புறம்.125) மீண்டும் பஞ்சு கொட்டுதலை உவமித்தனர். தேர்வண் மலையனைப் பாடிய செய்யுள் அவனது மறமேம்பாட்டை நன்கு விளக்கும் (புறம்.125). பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடிய செய்யுள், கருத்தாழமும் சொன்னயமும்