பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442

புறநானூறு - மூலமும் உரையும்


நல்லிசைத் தென்னன், முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை எனவரும் இவரது சொற்கள், இவரது புலமைச் செறிவையும், நாட்டுப் பற்றையும் நன்றாகக் காட்டுவன ஆகும். மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

இவரைப் பற்றிய குறிப்புக்களை நக்கீரனார் என்னும் தலைப் பின் கீழ்க் காண்க, இவர் வரலாறு விரிவானது; பழந்தமிழர் வரலாற்றின் பொற்கால வரலாறாக அமைவது.

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் 316

இச் செய்யுளையும், அகநானூற்று 170 ஆம் செய்யுளையும் செய்தவர் இவர். மதுரையைச் சார்ந்தவர்; 'கள்ளிற் கடையத்தம் மதுரையின் ஒரு பகுதியாகலாம். கள்ளில் ஆத்திரையனார்’ என்னும் புலவரின் பெயரும் இதனைக் காட்டும்; சோணாட்டு ஊர் இதுவென்பாரும் உளர். ‘நாகன் இவர் பெயர்; வெண்மை மேணிவண்ணம் பற்றியது. 'காக்கை கனவு காணும் என்று நயமாக

உரைப்பவர் இவர் (அகம்.170). கள்ளின் வாழ்த்திக் கள்ளின்

வாழ்த்தி’ எனத் தொடங்கும் இச் செய்யுளால். இப் பெயரடை பெற்றனர் எனலும் பொருந்தும். வல்லாண் முல்லைத் துறைச் செய்யுளான இது பொருட்செறிவு கொண்டதாகும். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்

சீத்தலைச் சாத்தனார் என்னும் தலைப்பினைப் பார்க்கவும். மதுரைத் தமிழக் கூத்தனார் 334

‘ஆரியக் கூத்து', 'தமிழ்க் கூத்து' என வழங்கிய இருவகைப் பண்டைக் கூத்துள் தமிழக் கூத்தாற் பெயர் பெற்றவர் இவர். இவருக்குக் கடுவன் மள்ளனார், நாகன் தேவனார் என்னும் இரு புதல்வர்களும் இருந்தனர்; அவர்களும் புலமையாற் சிறந்து விளங்கினர். இச் செய்யுள் பலவிடங்களிற் சிதைந்துள்ளது. இல்லறத்தாருள் தலைவனும் தலைவியுமாகிய இருவருமே இரவலரைப் பேணும் பெருஞ்சிறப்பினராகத் திகழ்ந்த செய்தியை இவர் செய்யுளால் அறியலாம். மதுரை நக்கீரர்

'நக்கீரனார் என்னும் தலைப்பினைக் காண்க மதுரைப் படைமங்க மன்னியார் 351

மாற்றாரது படை மங்குமாறு பொருது வென்றதன் மாண்பினாலே இப் பெயரைப் பெற்றனர் எனலாம். எயினனுக்கு உரியதான வாகைப் பட்டினத்தின் சிறப்பினை இவர்