பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

443


கூறுகின்றனர். மகளைத் தர மறுத்துநின்ற ஒரு தலைவனது ஊரைச் சுற்றி முற்றுகையிட்டனர்; களத்தில் வென்று அவளைக் கொள்வேம் எனத் துணிந்தனர்; அந்த நிலையை நினைத்து பணை நல்லூர் என்னாவது கொல்?’ என்று வருந்திப் பாடுகின்றார் இவர்.

மதுரைப் பேராலவாயர்

பேராலவாயர் என்னும் தலைப்பின் கீழ்க் காண்க மதுரைப் பூதன் இளநாகனார் 276

மதுரையைச் சார்ந்த பூதன் என்பாரின் மகனார் இவர். இளநாகனார் இவர் பெயர். பகைவருடைய பெரும் படையினைத் தான் ஒருவனாக நின்று கலக்கிய ஒரு மாவீரனது செயலை வியந்து, 'மடப்பால் ஆய் மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப், படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே என்று கூறியுள்ளார். இவர் சிறந்த உவமை இது. மதுரை வேளாசான் 305

மதுரைக்கண் இருந்த வேளிர் குடியினருள் ஒருவர்; ஆசிரியத் தொழில் செய்து வந்தவர். பார்ப்பன வாகைத் துறையாக அமைந்த செய்யுள் இது. பார்ப்பான் தூது உரைத்துச் சென்ற சொல்லாட்சித் திறனை இச் செய்யுள் பாராட்டுகின்றது. மருதன் இளநாகனார் 52, 55, 138, 139, 349

இவர் மதுரைக்கண் இருந்தவர்; மதுரை மருதன் இளநாகனார் எனவும் கூறப்பெறுபவர். அகநானூற்றுள் 23 கலித் தொகையுள் மருதம் பற்றிய செய்யுட்கள் 35 குறுந்தொகையுள் 4, நற்றிணையுள் 12 ஆகியவும் இவர் பாடியனவாகக் காணப்பெறும். மருதத் திணைச் செய்யுட்கள் செய்வதில் இவர் வல்லவர். இறையனார் அகப்பொருளுக்கு உரை இயற்றியவருள் இவரும் ஒருவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், நாஞ்சில் வள்ளுவனையும் இவர் பாடியுள்ளனர். “செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக் கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பலவாக வாழிய’ என இவர் நன்மாறனை வாழ்த்துகின்றார். இதனாற் குமரனுக்கும் 'நெடுவேள்” என்னும் பெயர் உண்டென்று அறிகின்றோம். 'கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப், பலிகண் மாறிய பாழ் படு பொதியில் நரை மூதாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம்’ எனக் (புறம். 56) கூறும் இவரது சொற்கள், அக் காலத்துப் பொதியிலையே நம் கண்முன் கொணர்ந்து நிறுத்துவனவாம். "அறநெறி முதற்றே அரசின் கொற்றம், அதனால், நமரெனக் கோல் கோடாதும், பிறர் எனக் குணங் கொல்லாதும், ஒர் அரசன்