பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

புறநானூறு - மூலமும் உரையும்


விளங்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் இவர் (புறம் 55). ஒரு கன்னியை, அவளைப் பெற்றோர் தர மறுத்தலால், வந்தோர் போரிட, அவ்வூரே அழிந்ததனை, மரம்படு சிறுதீப்போல அணங்காயினள் தான் பிறந்த ஊர்க்கே’ (புறம், 339) என்று கூறியவர் இவர். பரங்குன்றத்து முருகனை அந்துவன் பாடிய சிறப்பையும் இவர் போற்றுவர் (அகம். 34) பிட்டன் என்பானது சிறப்பையும், வாணனது சிறப்பையும் இவர் குறித்துள்ளனர். பரசுராமர் செல்லூர்க்கண் யாகஞ் செய்த செய்தியை இவர் கூறுகின்றனர் (220). இவர் செய்யுட்கள் இயற்கை எழிலையும் மக்களது வாழ்வியலையும் சுவையாக எடுத்துக் காட்டும் ஒப்பற்ற ஒவியங்கள் ஆகும். ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி செய்தியைக் கூறியவரும் இவரே (நற்216).

மாங்குடி மருதனார் 24, 26, 313, 335, 372, 396

இவரை மதுரைக் காஞ்சிப் புலவர் எனவும், மாங்குடிகிழார் எனவும் உரைப்பர். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனையும், வாட்டாற்று எழினியாதனையும் இவர் பாடியுள்ளனர். நெடுஞ்செழியன்மீது மதுரைக் காஞ்சி பாடியவர் இவரே. அகநானூற்றுள் ஒன்றும், குறுந்தொகையுள் மூன்றும், நற்றிணையுள் இரண்டும் இவர் பெயரான் வழங்கும் பிற செய்யுட்கள்.

'பொய்யறியா வாய்மொழியால், புகழ் நிறைந்த நன் மாந்தரொடு, நல்லூழி அடிப்படரப், பலவெள்ளம் மீக்கூற, உலகம் ஆண்ட உயர்ந்தோர்’ எனப் பாண்டிய மரபினரை இவர் கூறுவர். இவருடைய மதுரைக் காஞ்சிப்பாட்டு அக் காலத்தைய மதுரைமா நகரத்தின் சிறப்பையும், செவ்வியையும், பழந்தமிழ் மக்களின் வாழ்க்கை அமைதிகளையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாகும். நின் பகைவரும் தவஞ் செய்தார்; நினக்கு எதிரிட்டு 'வந்து களத்தே வீழ்ந்துபட்டு, உயர்நிலை யுலகம் பெற்றனர் அன்றோ என்று நெடுஞ்செழியனின் மறமாண்பை வியந்து பாடியவர் இவர்.

மார்க்கண்டேயனார் 365

இவர் செய்த இச் செய்யுளின் கருத்தமைதி இவரைச் சாவின்றி வாழ்பவரான மார்க்கண்ட முனிவர் என்று காட்டுவதாக் கொள்வர். இச் செய்யுள் பெருங்காஞ்சித் துறைச் செய்யுட்களுள் தலைசிறந்த செய்யுள் ஆகும். மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 126, 174, 226, 280, 383 கொற்கை சார்ந்த மாறோக்கம் என்னும் பகுதியைச் சார்ந்தவர்; பெண்பாலர் மகளிர்க்கு வந்தடையும் பசலை நோயை