பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446

புறநானூறு - மூலமும் உரையும்


வருணிப்பவர் இவர் (அகம்.392) ஆய் வேளின் பொதியில் வளத்தையும் இவர் போற்றுவர் (குறு. 84). இவர் முரசுகட்டிலில் துஞ்சக், கவரி வீசிய காவலனைப் போற்றிப் பாடிய செய்யுள், இரும்பொறையின் தமிழிதயச்சால்பைச் சிறப்புற விளக்குவதாகும். 'நெருஞ்சிப் பூச் சுடரின் சுடரினை எதிர் கொள்ளும்’ என்று கூறுவர் இவர் (புறம்.155). அரசனே உலகுக்கு உயிராவான் என்ற அறநெறியை விளக்கும், 'நெல்லும் உயிரன்றே என்னும் ஒப்பற்ற புறச் செய்யுளை (புறம். 184)ச் செய்தவரும் இவரே. மோசி சாத்தனார் 272

இவர் சாத்தனார் என்னும் பெயரினர். மோசி இவரது ஊராகலாம். செருவிடை வீழ்தல் துறையாக இவர் பாடிய இச் செய்யுள், நொச்சித் தழையை நடுவாக வைத்து நயமுறப் பாட்டப் பெற்றிருப்பதாகும். வடநெடுந் தத்தனார் 179

இவர் பெயர் வடம நெடுந் தத்தனார் எனவும் வழங்கும். நாலை கிழவன் நாகன் என்னும் மறமேம் பாட்டாளனை இச் செய்யுளால் இவர் நமக்குக் காட்டுகின்றனர். வடம வண்ணக்கண் தாமோதரனார் 172

இவர் வடநாட்டிலிருந்து வந்து, தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் கற்றுப், பெரும் புலவராக விளங்கியவர். 'வண்ணக் கண் என்பது, நாணய பரிசோதனை அலுவல். அதனைப் பார்த்தவர் இவர் எனலாம். இவராற் பாடப் பெற்றோன் பிட்டங் கொற்றன் என்பான் ஆவன். இவன் சேரரது ஆட்சிக்கு உட்பட்டிருந்த குறுநிலத் தலைவருள் ஒருவன் என்பதனையும் இச்செய்யுளால் அறியலாம். வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்

பேரிசாத்தனார் என்னும் தலைப்பின் கீழ்க் காண்க - வடமோதங் கிழார் 260

இச் செய்யுளையும், அகநானூற்று 317 ஆம் செய்யுளையும் செய்தவர் இவர். இளவேனிற் காலத்தின் வரவினை மிகவும் அழகாகக் கூறுகின்றது இவரது அகப்பாட்டு. வன்பரணர் 148, 149, 150,152, 153, 255

இவர் பரணர், நெடுங்கழுத்துப் பரணர் என்பாரினும் வேறானவர். கண்டீரக்கோப் பெருநற் கிள்ளியையும் வல்வில் ஓரியையும் பாடியவர். கண்டீரக் கோவின் பெருந்தகைமையை