பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

புறநானூறு - மூலமும் உரையும்


வெல்லும் படையுடன், நின் நாட்டில் சோறு பெருக நீ செயலாற்றி நடப்பாயாக (படைபலத்துடனும் ஈகை யறத்துடனும் அமைந்து விடாதே, நெல் வளமும் பெருகச் செய்வாயாக!” - என்று, புலவர் போற்றுகின்றார்)

சொற்பொருள்: 2 உறழ் மணி நடைக்கேற்ப ஒன்றற்கொன்று மாறுபட்டு ஒலிக்கும் மணி. 6. மிDறு - தேனி. 7. அயறு புண்வழலை, புண்ணினின்று வடியும் சீழ், 9. கந்து - கம்பம்; கடவுள் குறித்த தறியுமாம். 10. பாஅல் - பக்கம்; உயிரளபெடை 16. சாறு - விழா, 22 சினமாந்தர் - சினத்தையுடைய வீரர். 14. வாய் காவாது - இடம் காவாது. 17. கடும்பு ஆர்த்தும் தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும். 30 படைப்பு - செல்வம்.

23. நண்ணார் நாணுவர்!

பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன். திணை: வாகை. துறை: அரச வாகை, நல்லிசை வஞ்சியும் ஆம் -

(பாண்டியருள் பெரும்புகழ் பெற்றவன் இவன். 'ஆலங் கானத்து அஞ்சுவர இறுத்த, வேல்கெழு தானைச் செழியன் எனப் பிற சான்றோரும் இவனைப் போற்றுவர் (நற். 387)

வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக், களிறுபடிந்து உண்டெனக், கலங்கிய துறையும் கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், சூர்நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர் - 5 கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் கொள்பதம் ஒழிய வீசிய புலனும்; வடிவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் கடிமரம் துளங்கிய காரும், நெடுநகர் வினைபுனை நல்லில் வெவ்வரி நைப்பக், 10

கணைஎரி உரறிய மருங்கும் நோக்கி, நண்ணார் நாண, நாள்தொறும் தலைச்சென்று, இன்னும் இன்னபல செய்குவன், யாவரும் துன்னல் போக்கிய துணிவினோன் என, ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை 15 ஆலங்கானத்து அமர்கட்ந்து அட்ட கால முன்ப நின் கண்டனென் வருவல்; அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்