பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

449


பாட்ப்ப்ட்டோர் வர்லாறு (எண் - செய்யுள் எண்)

அகுரை - 233, 347

இவன் மதுரை நகரத்தில் இருந்தவன்; பாண்டியர் படைமறவருள் ஒருவன்; இன்கடுங் கள்ளின் அகுதை களிற்றொடு, நன்கலன் ஈயும் நாள்மகிழ் இருக்கை என் வரும் அகநானூற்றுச் செய்யுட்குறிப்பால் இதனை அறியலாம். இவனைப் பாடிய புலவர்கள் கபிலர், கல்லாடனார், பரணர், மருதம் பாடிய இளங்கடுங்கோ, வெள்ளெருக்கிலையார் முதலியோர் ஆவர். 'மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை (புறம். 347) என இவனது மற மாண்பினைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். பாண்டியருக்காகப் போரிட்டு, எவ்வி' என்னும் தலைவனை வென்றவன் இவன்; அவனுக்குரிய நீடுரையும் மிழலையையும் கைப்பற்றியவன். இவனது நாடு நெய்தலஞ் செறுவின் வளங்கெழு நன்னாடு (அகம். 113) எனக் குறிக்கப் பெற்றிருப்பதனால், அது கடற்கரை நாடாக ஆகின்றது. ஆகவே, இவன் வாழ்ந்த கூடற்பட்டினம் கடற்கரையூர் என்பதனையும், பாண்டியரது கோ நகராகிய மதுரையன்று என்பதனையும் அறிதல் வேண்டும். ஆய் எயினனின் மகளிர்கள், அவன் நன்னன் பொருட்டுப் பொருது இறந்த காலத்துப் பட்ட துயரத்திற்கு ஆற்றாது, மிஞ்சிலியை வென்று, அவர் துயரைப் போக்கியவன் இவன். மீண்டும் இவனுக்கு ஒரு சமயம் துயரம் நேர்ந்தபோது, கோசர்கள் இவனுக்குத் துணையாக அமைந்து இவனைக் காத்தனர் (அகம்13). இவன் சிறந்த கொடையாளியாக விளங்கியவன். அஃதை என்னும் சோழர் குடிநங்கையைப் பற்றியும் அகநானூற்றுள் (96) காணலாம். அவள் பெயரும் இவன் பெயரும் ஒன்றாக இருப்பது கொண்டு மயங்குதல் கூடாது.

அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி - 230

இவன் அதியமான் குடும்பத்தைச் சார்ந்தவன். அதியமான் நெடுமானஞ்சியின் மகனான பொகுட்டெழினி வேறு; இவன் வேறு. இவனைப் பாடியவர் அரிசில் கிழார். இவன் தகடுர்ப் போரிலே வீழ்ந்துபட்ட காலத்து அரிசில் கிழார் பாடிய கையறுநிலைச் செய்யுள் இது. இதன்கண் இவனைப் பிரிந்ததனால் வாடிய சுற்றத்தின் அவல மிகுதியைக் கூறுவதுடன், வீழ்குடி உழவன் வித்து உண்டாங்கு கூற்றுவன் இவனுயிரைத் தன் அறியாமையால் உண்டனன்' எனவும் கூறுகின்றனர். அத்துணை மற மாண்பும், கொடை மாண்பும், பண்பு மேம்பாடும் கொண்டோனாக விளங்கியவன் இவன்.