பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeÓlygi& Gsólseir 453

இவன் கொடையை வியந்து பாராட்டிப் பாடியுள்ளனர். இவனுடைய மறமாண்பும் வியத்தற்குரியது. அதனை, 'ஆயின் மழைதவழ் பொதியில் ஆடுமகள் குறுகலாமேயன்றிப் பீடுகெழு மன்னர் குறுகல் அரிதாகும் எனக் கூறப்படுவதனால் அறியலாம். 'தென்திசை ஆய்குடி இன்றாயிற் பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே என, இவன் குடியின் சிறப்பாலேயே உலகம் நிலை பெறுகின்றது என்றும் போற்றுவர் (132). இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறநிலை வாணிகன் ஆய் அலன் (135) என்பது, இவனுடைய கொடை மரபிற்குச் சிகரமாக விளங்குவதாகும். -

இயக்கன் - 71

இவன் பூதப் பாண்டியனது நண்பர்களுள் ஒரவன். பெயர்க் காரணம் தெரிந்திலது. இயக்கர்’ என்னும் இனத்தானாகவோ, அல்லது களத்தே அயராது இயங்கும் இயக்கத்தானாக விளங்கியதனாலோ இப் பெயரைப் பெற்றவனாகலாம். இருங்கோவேள் - 201 - 202

இவன் பழைதான வேளிர் குடியினருள் ஒருவன். ‘புலி கடிமால்' என்னும் பெயரையும் கொண்டவன்.வேள் பாரி மறைந்த பின்னர், அவன் மகளிரைக் கபிலர் இவன்பால் அழைத்துச் சென்று, அவரை மணந்து அவருக்கு வாழ்வளிக்குமாறு வேண்டவும், அதற்கிசையாது மறுத்தவன் இவன். சிற்றரையம் பேரரையம் என்னும் கோட்டைகளுக்குரியவன். கரிகாற் பெருவளத்தானால் வெற்றிகொள்ளப் பெற்றவருள் இவனும் ஒருவன். தலையாலங்கானப் பெரும் போரில் நெடுஞ்செழிய னோடு பொருது தோற்றோடியவருள் ஒருவனும் இவன் ஆவான். கழா அத் தலையாரை இகழ்ந்து, அவரால் பழிக்கப் பெற்ற குடியினன். இவனை எவ்வி பரம்பரையினன் எனவும், இவன் மரபினரே பிற்கால ஹோய்சாளர்கள் எனவும் உரைப்பார்கள். இளங் கண்டீரக்கோ - 151

இவன் கண்டீரக்கோப் பெருநள்ளி என்னும் வள்ளலின் இளவல் ஆவான். பெருந்தலைச் சாத்தனார் இவன் குடிச் சிறப்பைப் பாராட்டியுள்ளனர். இவன் நண்பன் இளவிச்சிக்கோ என்பவன் ஆவான். இளங் குமணன் - 165

இவன் குமண வள்ளளின் இளவல்; அவன்பாற் பகை கொண்ட, அவனைக் காடுபோக்கி அவன் நாட்டைத் தான் கைக்கொண்டவன்; பெருந்தலைச் சாத்தனாரால் பின்னர்த்