பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

புறநானூறு - மூலமும் உரையும்


தெளிவுற்றுத், தன் முன்னோனின் பெருநிலையைப் போற்றிப் பகையொழிந்து திருந்தியவன்,

இளங் தத்தன் - 47 -

ஒரு புலவர்; சோழன் நலங்கிள்ளி இடத்திலிருந்து உறையூர்க்குச் சென்ற காலத்து, ஒற்றுவந்தானென்று காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியால் கருதிச் சிறையிடப்பட்டுக் கோவூர் கிழாரின் முயற்சியால் உயிர் தப்பியவர்.

இள விச்சிக்கோ - 151

இவன் விச்சிக்கோவின் இளவல். இளங் கண்டீரக் கோவின் நண்பன். இளவச்சிரக்கோ எனவும் இவன் பெயர் வழங்கும். இவன் பெண்கொலை புரிந்த நன்னனின் மரபிலே தோன்றியவன். ஆதலின் பழிகொண்ட குடியைச் சேர்ந்தவனாகச் சான்றோராற் பாடப்பெறாது விடுக்கப்பட்டவன்.

இள வெளிமான் - 207, 237

இவன் வெளிமானின் இளவல். கொடைக் குணத்தை இவன் போற்றாதவன். அதனால், பெருஞ்சித்திரனாரால் அவமதித்துப் பாடப்பெற்ற பழியினைப் பெற்றவன்.

ஈர்ந்துர்கிழான் தோயன் மாறன் - 180

இவன் வேளாண் குடியினன்; அரசனுக்குப் படைத் துணை நின்றவன். தன் செல்வங்களைப் பிறருக்கு உதவுதலில் இன்பங் கண்டவன்; இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சிலுரர் மாடலன் மதுரைக் குமரனார் ஆவார்.

எயினன் - 351

இவன் வாகைப் பட்டினத்துக்கு உரியவன்; சிறந்த கொடையாளி; மதுரைப் படைமங்க மன்னியாராற் பாடப் பெற்றவன்; பரணராலும் புகழப்பெற்றவன். ஆய் எயினன் என்பானும் இவனும் ஒருவனே என்பர். பறவைகள் பால் அன்புடையவன். இவன் மிஞலியோடு பொருது புண்பட்டு வீழ்ந்தபோது பறவையினம் சிறகாற் பந்தரிட்டு இவனைக் காத்தன (அகம் 148. 181), போராற்றலில் முருகனைப் போன்றவன் இவன் என்பர். இவன் குடிப்பிறந்த ‘நல்லினி என்பாள், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனின் மனைவியாவாள்.

எவ்வி - 24, 202, 233

இவன் மிழலைக் கூற்றத்தின் தலைவன்; கடற்கரைக் கண்ணதான நீழல் என்னும் ஊருக்கு உரியவன். மாங்குடி கிழார், கபிலர், வெள்ளெருக்கிலையார், குடவாயிற் கீரத்தனார்