பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் 459 குறிப்பர். இவனைப் பாடியவர் கோவூர் கிழார் என்னுஞ் சான்றோர் ஆவர். ஆவூர்க் கோட்டையில் இவன் அடைத்திருந்த போது இவனை முற்றுகையிட்டு வெற்றி பெற முயன்றான் நலங்கிள்ளி (44). இவனும் நலங்கிள்ளியும் உடன் பிறந்தவர்கள் (45). இவன் முடிவில் காரியாற்றுப் போரிலே களத்தில் வீழ்ந்து மடிந்தான். - கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21, 67

இவன் கானப்பேரெயிலுக்கு உரியவனான வேங்கை மார்பனை வென்ற சிறப்பினன். மிகச் சிறந்த தமிழ்ப்பற்று உடையவன்; கடைச்சங்கம் இரீஇய பாண்டியருள் ஒருவன். இவன் முன்னிலையிலேதான் திருக்குறள் அரங்கேற்றப் பெற்றது. எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூற்றைத் தொகுப்பித்தேன் இவன். இவனைப் பாடியவர்கள் ஐயூர் மூலங்கிழாரும், ஒளவையாரும் ஆவர்.சேரமான்மாவெண் கோவும்,சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், இவனும் நட்புடன் வாழ்ந்து வந்தனர். குமணன் - 158 - 165

இவன் முதிரமலைக்குத் தலைவனாக விளங்கியவன். வந்தோர்க்கு வரையாது வாரி வழங்கிப் புகழ்பெற்ற பெருவள்ளல். தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த காலத்தும், தன்னை வந்திரந்த பெருந்தலைச் சாத்தனார்க்குத் தன் தலையைக் கொடுத்தற்கு விரும்பி வாளைத் தந்த மேன்மைக் கொடையாளி இவன். இவனைப் பாடியோர் பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார் என்போராவர்.

கொண்கானங் கிழான் 154, 155, 156

இவன் கொண்கான நாட்டின் தலைவனாக விளங்கியவன்! வேள்ாண் மரபினன்; இவனைப் பாடியவர் மோசி கீரனார் ஆவர். கொண்கானத்து நன்னன் என்னும் ஒருவனைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ குறிப்பிடுவர். அவர் சேரர்களது படைத் தலைவர்களுள் ஒருவனாக விளங்கியவன். இச்செய்யுட்களுள் கொண்பெருங் கானத்துத் தலைவனாகிய இவனது எறிபடைக்கு ஓடா ஆண்மையினையும், கொடைச் சிறப்பினையும் மோசி. கீரனார் போற்றியுள்ளனர். கோச்சேரமான் யாணைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - 17, 20, 22, 33, 125, 229

இவனைக் குறுங்கோழியூர் கிழாரும், கூடலூர் கிழாரும், பொருந்தில் இளங்கீரனாரும் பாடியுள்ளனர். இவன் செங் கோன்மையாளனாகவும், வண்மையாளனாகவும், மறத்தகையாள