பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

புறநானூறு - மூலமும் உரையும்


கொண்டிருந்த உரிமை நட்பின் செறிவு, மெல்லிய வாமால் நும் கை’ என இவன் கேட்டதும், அவர் சொல்லிய செய்யுளால் விளங்கும் (புறம் 14). இவன் வஞ்சிக்கண் அரசு வீற்றிருந்தவன்; வரையாது வழங்கியவன். இவனைக் கல்லென் பொருநை மணலினும், ஆங்கட் பல்லூர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவான ஆண்டுகள் வாழ்க வென வாழ்த்துகின்றார் குண்டுகட் பாலியாதனார் (387), இவன் சிக்கற்பள்ளி என்னும் இடத்தில் இறந்து, புகழால் என்றும் இருப்பவன். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - 5

இவன் சேரருள் இரும்பொறை மரபினன்; கொங்கு நாட்டுக் கருவூரிலிருந்து அரசோச்சியவன்; வாள் மறத்தால் இணையற்றோ னாகத் திகழ்ந்தவன். நரிவெரூஉத் தலையாருக்கு அவரது பழைய நல்லுடம்பை கிடைக்குமாறு செய்து, அவரால் போற்றப்பெற்ற பெருமைக்கு உரியவன். -

சேரமான் கணைக்கால் இரும்பொறை - 74

இரும்பொறை மரபைச் சார்ந்த சேரருள் இவனும் ஒருவன். கணைய மரத்தைப் போன்ற வலிய கால்களை உடையவன் என்பதுபற்றி இப் பெயர் பெற்றனன். இவனைப் பற்றிப், பாடினோர் வரலாற்றுள் காண்க. சேரமான் குட்டுவன் கோதை - 54

இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ஆவர். இவன் கொடையாண்மையும் படையாண்மையும் உடையோனாக வாழ்ந்த சேரர் குலத்தாருள் ஒருவன். இவனுடைய மறமேம்பாட்டைக் குறிப்பவர், 'இடையன், சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலிதுஞ்சு வியன் புலத்தற்றே, வலிதுஞ்சு கிடக்கையவனுடை நாடே என்கின்றனர். இவன் குட்ட நாட்டுப் பகுதியை ஆண்டவன். இவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் காலத்தவன். சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை - 210, 211

இவன் பெயர் குடக்கோச் சேரல் இளம்பொறை எனவும் வழங்கும். பதிற்றுப்பத்துள் ஒன்பதாம் பத்திற்குரிய பாட்டுடைத் தலைவன் இவன். இவனைப் பாடியவர் பெருங்குன்றுார் கிழார்.

சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் - 62, 63, 368

இவன் சேரவரசர்களுள் குடநாட்டு அரசவழியைச் சார்ந்தவன் ஆகலாம். நெடுஞ்சேரலாதன்' என்னும் பெயரின்