பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

uယ့်နှ့ံနှံ ဧဧ#ဧခါး - 463

ஒற்றுமையைக் கருதி, இவனையும், இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனையும் ஒருவனாகக் கருதுவார் சிலர். இவன் மறமாண்பும், தமிழன்பும், கொடைப்பண்பும் கொண்டவன். சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு போர்ப் புறத்துப் போரிட்டவன் இவன். அக் களத்தில் இருவரும் வீழ்ந்தனர் என்பர் கழாத்தலையார், பரணர் முதலியோர். போர்க்களத்துப் பெரும் புண்பட்டுக் கிடந்த அந் நிலையினும் கூடத், தன்னைப் பாடிய கழாத்தலையாருக்குத் தன் மார்பிற்கிடந்த ஆரத்தை வழங்கிப் புகழ் பெற்றவன் இவன் என்பதனை அறிகின்றோம் (368). சேரமான் கோக்கோதை மார்பன் 48 - 9

இவன் சிறந்த கொடையாளியாக விளங்கியவன்; தொண்டிப் பட்டினத்திலிருந்து, அந்தப் பகுதிச் சேரநாட்டைக் காத்து வந்தவன். இவன் நாடு குறிஞ்சியும், மருதமும், நெய்தலுமாக ஒருங்கே மயங்கிக் கிடந்த நிலப்பகுதியாகும். இதனை 'நாடன் என்கோ’ (புறம் 49) என்னும் செய்யுளால் அறிகின்றோம். பொய்கையாரும் நக்கீரனாரும் இவனைப் பாடியுள்ளனர்.

சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் - 387

இவன் சிறந்த கொடையாளியாக விளங்கியவன்; சேரவரசருள் கடுங்கோ’ மரபைச் சார்ந்தவன்; இரும்பொறை நாட்டுப் பகுதிக்கண் இருந்தவன். தன்னை வந்து இரந்தோரது சிறுமையை நோக்காது, தன் பெருமையின் தகவு நோக்கிக் கொடுத்து இன்புற்றவன் இவன். செல்வக் கடுங்கோ வாழியாதனும் இவனும் ஒருவனே என்பர்.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - 245

இவன் அருளாளனாக விளங்கியவன்; தன் மனைவி இறந்ததனால் பெரிதும் மனம் நொந்தவன்; அப்போது இவன் பாடிய செய்யுள் இது. ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் என்னிதன் பண்பே என வருந்துகின்றான் இவன். சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - 50

இவன் சேரமான்களுள் இரும்பொறை மரபைச் சேர்ந்தவன். சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனின் மகன். தகடுர்ப் பெரும்போரில் அதியமான் நெடுமான் அஞ்சியை அழித்தவன்; அதனாற் புகழ்பெற்றவன். இவன் காலத்தில் சேரரது செல்வாக்கு உயரிய நிலையில் இருந்தது.பதிற்றுப்பத்துள் இவனைப் பாடியவர் (எட்டாம் பத்து) அரிசில்கிழார் என்னும் சான்றோர் ஆவர். அவருக்கு இவன் அளித்த பரிசில் வரலாற்றுப் புகழ் பெற்றது. "தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று, கோயிலுள்ள