பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464

புறநானூறு - மூலமும் உரையும்


வெல்லாம் கொண்மினென்று, காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசுகட்டிலையும்” கொடுத்தனன். அது கண்டு வியப்பினால் மெய்ம்மறந்த அரிசில் கிழாரோ, யாம் இரப்ப இதனை ஆள்க’ என்று வேண்டி, அரசை, இவனிடம் தந்து, தாம் அமைச்சுப் பூண்டார். மேலும், முரசுகட்டிலில் அறியாது துயின்ற மோசிகீரனாரைத் துன்புறுத்தாமல், அவர் துயில் எழுந்துணையும் கவரிவீசி நின்ற காவலன் இவன். இவ்வாறு தமிழறிந்தாரைப் போற்றிய தமிழார்வத்தின் தனிப்பெருந் தலைவனாக விளங்கியவன் என்பதுடன், இவனே மாபெரும் தமிழ்ப் புலவனாகவும் திகழ்ந்தான். 'பாலை பாடிய பெருங் கடுங்கோ' இவனாதலே பொருந்தும். இவன் தம்பி இளஞ்சேரல் இரும் பொறை என்பான்; அவனே, மருதம் பாடிய இளங்கடுங்கோ' எனலும் பொருந்தும். தகடூர் யாத்திரையும் பிற செய்யுட்களும் இவன் புகழைப் பரப்புகின்றன. அரிசில்கிழாரும், மோசிகீரனாரும் இவனைப் பாடிய புலவர்கள் ஆவர்.

சேரமான் பாமுளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி - 10, 203

இவன் நெய்தலங் கானற் பகுதியில் வாழ்ந்த சோழர் குடிச் சிற்றரசர்களுள் ஒருவன். இளஞ்சேட் சென்னி இவன் பெயர்.இப் பெயருடன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி' என்பானையும், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி’யையும் காண்கின்றோம். சேரரது பாமுளுரை வென்ற சிறப்பால் இப் பெயரடை பெற்றவன் ஆகலாம். இவனைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவர். செய்து இரங்கா வினைச் சேண்விளங்கும் புகழ் உடையவன் இவன். ஆரெயில் அவர்கட்டாகவும் நூமதெனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் என்று பாடுகின்றார் புலவர். இது இவனது வென்றி மேம்பாட்டைக் காட்டுவதாகும். வெற்றி பெறுவதில் அத்துணை உறுதி கொண்டவன் இவன். இளம் பெருஞ்சென்னி என (அகம் 375) வருபவன் மற்றொருவன் ஆகலாம்.

சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ - 11, 282

இவன் கொடையாண்மையும் படையாண்மையும் கொண்டோனாகவும், சிறந்த தமிழ்ப் புலவனாகவும் விளங்கியவன். பாலைத்தினைச் செய்யுட்கள்ை மிகவும் இனிமையாகப் பாடுகின்ற ஆற்றல் பெற்றவன். இவனே தகடூா எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை யாகலாம். ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு’ (அகம்,313) என, ஆள்பவரின் சீர்கேட்டால் நாடு துன்புறும் எனக் கூறியவன் இவன். இச் செய்யுட்களுள் பேய்மகள் இளவெயினி பாடியது (1) இவனது கொடைச் சிறப்பையும், போர் மறத்தையும் காட்டுவதாகும். களத்தில் மாண்ட வீரனின் நல்லிசையைக் கூறும்