பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466

புறநானூறு - மூலமும் உரையும்


யுடனும் நட்புப்பூண்டு வாழ்ந்தவன். சேரர் குலத்து அரசகுடியினருள் இவனும் ஒருவன் எனலாம்.

சேரமான் வஞ்சன் - 398

இவன் சேரர்குடிச் சிற்றரசர்களுள் ஒருவன், வள்ளன்மையிற் சிறந்தவன். பாயல்' என்னும் மலைப்பகுதியின் தலைவன். இவனைப் பாடியவர் திருத்தாமனார் என்னும் சான்றோர். “வாய்மொழி வஞ்சன்’ என்னும் சொற்கள் இவன் தன் சொற்களைப் பேணுகின்ற செயலில் வஞ்சங் கொண்டோனாக (தளராத உறுதி கொண்டோனாக) விளங்கியவன் எனக் காட்டும். இவன் இயற்பெயர் தெரிந்திலது. சோனாட்டுப் பிடவூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன் - 395

இவன் சோணாட்டான், வேளாளன்; பிடவூர் கிழானின் மகன். இவன் பெயர் 'பெருஞ்சாத்தன்' என வழங்குவதிலிருந்து, 'இளஞ்சாத்தன்' என இவனது இளவல் ஒருவனும் இருந்திருத்தல் கூடும் எனலாம். இவனைப் பாடியவர் மதுரை நக்கீரனார். இவன் புலவரைப் பேணிய சிறப்பு பெரிதும் வியத்தற்கு உரியது. 'தன்மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை 'என்போற் போற்று' என்றோன் என்று கூறுகின்றார் நக்கீரர். அதற்கண்டு, 'அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே' என்றும் அவர் கூறுகின்றார். அத்துணைச் சிறப்பினன் இவன்.

சோணாட்டுப் பூஞ்சாற்றுர்ப் பார்ப்பான் கெளனியன்

விண்ணந்தாயன் - 166

இவன் முடிகொண்டான் ஆற்றங்கரையில் இருந்த பூஞ்சாற்றுாரினன். அரசனால் தாயமாகப் பெற்ற நிலத்திலிருந்து பெற்ற வருவாயைக் கொண்டு, வேதநெறியைக் காத்து வந்தவன். இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார் என்னுஞ் சான்றோர் ஆவர். இவன் தமிழ்ப் புலவருக்கும் கொடுத்துக் கொடையாளியாக விளங்கியவன் என்பது இச் செய்யுளால் அறியப்படும். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - 16, 125, 367, 377

இவன் போராற்றலில் வல்லவன்; அத்துடன் வடவரசர் மரபின்படி இராசசூய வேள்வி இயற்றியவன். சேரமான் மாரி வெண்கோவுடனும், பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியுடனும் நட்புப்பூண்டு வாழ்ந்தவன். பாண்டரங் கண்ணனார், ஒளவையார், உலோச்சனார், பேரி சாத்தனார் போன்ற பெரும் புலவர்களாற் பாடப் பெற்றவன். கடையேழு வள்ளல்களின் காலத்தவன். தேர்வண் மலையனின் துணையோடு