பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

467


சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை வென்றவன். இந்த மாந்தரஞ் சேரலே, சேரமான் யானைக்கட்சேய் மரந்தரஞ் சேரல் என்பர். பகைவரிடத்து இவன் எத்துணைக் கொடியவனாக நடந்து கொள்வான் என்பதனைப் பதினாறாம் செய்யுளாற் காணலாம். 'பிறர்க்கு உவமம் தானல்லது, தனக்கு உவமம் பிறர் இல்’ என்னுமாறு, புகழோடு வாழ்ந்து சிறந்தவன் இவன்.

சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி - 16

இவனைப் பாடியவர் கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார். "எஃகு விளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி' என இவனை இவர் குறிப்பிடுவர். படைமறமும் கொடைமடமும் ஒருங்கே கொண்டு வாழ்ந்தவன் இவன் பகைவரை அழித்தலிலும், அன்பரைக் காத்தலிலும் தவறாதவன்.

சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி - 4, 266

இவனே கரிகால் வளவனின் தந்தை என்பர். இவன் அழுந்துர் வேளிடத்துப் பெண் கொண்ட சிறப்பினன். பரணரும், பெருங்குன்றுார் கிழாரும் இவனைப் பாடியுள்ளனர். கொடை வல்லோனாகவும், போர் வல்லோனாகவும் விளங்கிய சிறப்பினன். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், கடையெழு வள்ளல்கள் ஆகியோர் காலத்தவன் இவன்.

சோழன் கரிகாற் பெருவளத்தான் - 7, 65 - 6

இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகனென்பதனைப் பொருநராற்றுப் படை கூறுவதனாற் காணலாம். அழுந்துர் வேள் இவன் தாய்மாமன். இவன் நாங்கூர் வேளிடத்துப் பெண் கொண்டவன். பொருநராற்று படைக்கும் பட்டினப் பாலைக்கும் பாட்டுடைத் தலைவன். இவன் வரலாறு விரிவானது. இவனைப் பாடியோர் கருங் குழலாதனார், வெண்ணிக் குயத்தியார், கடியலூர் உருத்திரங் கண்ணனார், கழாத்தலையார், முடத்தாமக் கண்ணியார் முதலியோராவர். இவன் காலத்திலேயே காவிரிக்குக் கல்லணை கட்டப்பெற்றது என்று வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. வெண்ணி பறந்தலையிற் சேரமான் பெருஞ் சேரலாதனையும் அவனுக்கு உதவுதற் பொருட்டுத் துணையாக வந்த பாண்டியனையும் வெற்றி கொண்டவன். மற்றும் பல மன்னர்களையும் வென்று நிகரற்றோனாக விளங்கியவன். இமயம் வரை சென்று பல நாடுகளையும் தன்னடிக்குள் அடிப்படுத்தியவன். பகைவரை அழித்தலில் இரவும் பகலும் என்னாது போரிட்டு வெற்றி கொள்ளும் கடுஞ் சினத்தை உடையவன் இவன் (புறம்.7). இவனாற் புறப்புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், அதற்கு