பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

புறநானூறு - மூலமும் உரையும்



24. வல்லுனர் வாழ்ந்தோர்!

பாடியவர்: மாங்குடி கிழவர் மாங்குடி மருதனார் எனவும் பாடம் பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. -

('தொல்லிசை உலகத்துத் தோன்றி நின்று இறந்தோர் பலராவர் என நிலையாமை கூறி, 'அதனால் இனிது ஒழுகுமதி என்றமையால், இச் செய்யுள் பொருண்மொழிக் காஞ்சி ஆயிற்று. 'நின்று நிலைஇயர் நின் நாண்மீன்' என, அவன் நாளிற்கு முற்கூறியவாற்றான் ஒர் இடையூறு கண்டு, அவன்கண் அன்பால் அஞ்சி, ஓம்படை கூறியது என்பர் நச்சினார்க்கினியர் - (தொல். புறத். சூ. 16 உரை). தொன் முதிர் வேளிர் - தொன்மையாகவே தோன்றி வழிவழி நிலத்தைக் கர்த்துச் சிறந்த பழங்குடியினரான வேளிர்)

நெல் அரியும் இருந் தொழுவர் செஞ் ஞாயிற்று வெயில் முனையின், தெண் கடல் திரை மிசைப்பா யுந்து; திண் திமில் வன் பரதவர் - வெப் புடைய மட்டுண்டு, - - 5

தண் குரவைச் சீர்தூங் குந்து; தூவற் கலித்த தேம்பாய் புன்னை மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து, வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10

முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் இரும் பனையின் குரும்பை நீரும், பூங் கரும்பின் தீஞ் சாறும் *. ஓங்கு மணற் குவவுத் தாழைத்

தீ நீரோடு உடன் விராஅய், - - 15 முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயுந்து, தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய ஓம்பா ஈகை மாவேள் எவ்வி

புனலம் புதவின் மிழலையொடு - கழனிக கயலார் நாரை போர்வில் சேக்கும், - 20

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்,

குப்பை நெல்லின், முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய! நின்று நிலைஇயர் நின் நாண்மீன்; நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீனே; 25