பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

புலியூர்க் கேசிகன் 471

சோழிய ஏனாதி திருக்குட்டுவன் - 394

சோழர் படைத் தலைவருள் ஒருவன். மிக்க கொடையாளி; குட்ட நாட்டைச் சேர்ந்தவன். கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் இவனைப் பாடியுள்ளனர். இவனது பெருங்கொடைச் சிறப்பை இச் செய்யுளால் அறியலாம். இவனைச் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் காலத்தவன் என்றும் கூறுவர். தந்துமாறன் - 360

இவன் ஒழுக்கத்தாற் சிறந்தவன்; சிறந்த கொடையாளியாகவும் விளங்கியவன். இவன் பெயரால் இவனைப் பாண்டியர் குடியினருள் ஒருவனாகக் கருதலாம். இவனைக் காண வந்தவர் சங்க வருணர் என்னும் நாகரியர். அவர் இவனுக்கு மெய்ப்பொருள்களை எடுத்துக் கூறக் கேட்டு இன்புற்றவன் இவன். தருமபுத்திரன் - 366 - -

- இவன் ஒரு சிற்றரசன் என்பர் சிலர். ஆயின், அறவோன்

மகனே! மறவோர் செம்மால்' எனக் குறித்திருப்பதனைக் கருதியும், பாடியவர் 'கோதமனார்’ என்பதை எண்ணியும், பஞ்சவர் முதல்வனான தருமபுத்திரனே இவன் என்றால் பொருந்தும் எனவுரைப்பர் சிலர். இதுவே பொருத்தமாகலாம். பாரதப் போருள் வெற்றிபெற்ற களிப்பிலே மூழ்கினானுக்கு, நிலையாமையை அறிவுறுத்தி, அறவாழ்விற் செல்லுமாறு அறிவுறுத்துகின்றார் முனிவர். * - தழும்பன் - 348

இவன் ஊனுர்த் தலைவன் வாய்மொழித் தழும்பன் என்று பெயர் பெற்றவன்; அதனாற் கோசர் குலத்தவன் என்றும் கூறுவர். இவனைப் பாடியவர் பரணர். தாமான் தோன்றிக்கோன் - 399

இவன் தோன்றி என்னும் மலைக்குத் தலைவனாக விளங்கியவன். இவனைப் பாடியவர் ஐயூர் முடவனார். இவர் பகடு வேண்டினர்; இவனோ ஊர்தியோடு பலவான பகடுகளையும் கொடுத்தனன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனின் காலத்தவன்.

தித்தன் - 80, 352, 395

இவன் உறையூரில் இருந்து வந்த சோழவரசருள் ஒருவன்.

'நொச்சி வேலித் தித்தன் உறந்தை (அக212) என இவனது உறந்தை