பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

473


நன்னன் - 151 -

இச் செய்யுளுள் (151) பெருந்தலைச் சாத்தனார் நன்னனது பழிச் செயலைப் பற்றிக் குறிப்பாக எடுத்துக் கூறுகின்றனர். இவன் பாழி பாரம் பிரம்பு மலைகளுக்கு உரியவனாக விளங்கியவன். 'பெண் கொலை புரிந்தவன்' என்னும் பழியைப் பெற்றவன். இவனுடைய பாழி நகரிலே வேளிர் குலத்தார் தங்கள் செல்வங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர்; அத்தகைய வலிமை உடையவன் இவன். இரணிய முட்டத்துப் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனாரின் மலைபடுகடாம் என்னும் பாட்டுக்குரிய பாட்டுடைத் தலைவன் இவன் மகன் ஆகலாம் என்பர். நாஞ்சில் வள்ளுவன் - 137 - 40, 380

இவன் நாஞ்சில் மலைப்பகுதியை ஆண்டு வந்தவன். சேரனுக்குத் துணைவலியாக விளங்கியவன். கொடைச்சிறப்பால் புகழ் பெற்வன். ஒளவையார், ஒருசிறைப் பெரியனார், மருதனிள நாகனார், கருவூர்க் கதப்பிள்ளை முதலியோராற் பாடப் பெற்றவன். 'உயர்சிமைய உழாஅ நாஞ்சிற் பொருந’ என்று (159) கூறப்படுவதனால், இவன் மலைவளத்தாற் பெரிதும் சிறப்புடைய நாட்டை உடையோனாயிருந்தவன் எனலாம். சிறிது அரிசி வேண்டிய ஒளவையாருக்கு, 'இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர் பெருங்களிறு நல்கியோன் இவன் (புறம் 140).

நாலை கிழான் நாகன் - 179

இவன் பாண்டியர் படைத் தளபதியருள் ஒருவன். வடம நெடுந் தத்தனாராற் பாடப் பெற்றவன். இவனுடைய போர் வென்றியையும்,கொடைச் சிறப்பையும் இச் செய்யுள் கூறுகின்றது. நாலை - ஒர் ஊர்.

நெடுங்கிள்ளி-4-5,47

இவன் சோழர் குடியினருள் ஒருவன். ஆவூரும் உறையூரும் இவனிடத்திலிருந்தன. சோழன் நலங்கிள்ளி அவற்றை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முயன்றான். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி எனவும் இவனைக் கூறுவர். இவனைப் பாடியவர் கோவூர் கிழார். - நெடுவேளாதன் - 338

இவனைப் பாடியவர் குன்றுார் கிழார் மகனார். இவன் பெயர் ஆதன், இவன் வேளிர்குடித் தலைவருள் ஒருவன். இவன் போந்தைப் பட்டினத்துக்கு உரியவன். இவன் காலத்துப் போந்தை மிக்க வளமுடன் விளங்கியது என்பதனை இச் செய்யுள்ால் அறியலாம்.