பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/487

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

475


பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 12, 367

படைமுகத்திற் பெருஞ்சினத்தோடு செயல்படும் ஆற்றல் மிக்கவன். ஆதலின் 'உக்கிர' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றனன் எனலாம். வேங்கை மார்பனுக்கு உரியதாயிருந்த கானப் பேரெயிலை வெற்றி கொண்டவன் இவன் சேரமான் மாரிவெண் கோவும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், இவன் காலத்துச் சேர சோழர்கள். திருக்குறள் இவன் முன்னர் அரங்கேற்றப் பெற்றது. இவனே அகநானூற்றைத் தொகுப்பித்தவன். இவனை ஐயூர் மூலங்கிழாரும், ஒளவையாரும் பாடியுள்ளனர்.

பாண்டியன் கீரஞ்சாத்தன் - 178

இவன் பெயர் பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் வழங்கும். இவன் பாண்டியர் தளபதியருள் ஒருவன். 'உண்ணாராயினும் தன்னொடு சூளுற்று, உண்மென இரக்கும் பெரும பெயர்ச் சாத்தன்' என, இவனது வண்மையை ஆவூர் மூலங்கிழார் போற்றுவர்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி - 51 - 1

இவன் போராற்றல் பொருந்தியவன். நீர்மிகிற் சிறையுமில்லை; தீமிகின் மன்னுயர் நிழற்றும் நிழலுமில்லை; வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோரன்ன சினப்போர் வழுதி என்று இவனது மறமேம்பாட்டைக் கூறுவர் (51). "வடபுல மன்னர் வாட, அடல் குறித்து இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி என்று, மருதனிள நாகனார் இவனைப் போற்றுவர் (52). இவன் பெருங்கொடையாளனாகவும், மாவீரனாகவும் விளங்கியவன்.

பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் - 59 -

இவனுடைய பேராற்றலை ஞாயிற்றின் ஆற்றலோடு ஒப்பிட்டுக் காட்டிப் போற்றுவார் சீத்தலைச் சாத்தனார். இவனது அருளுந் தன்மைக்குத் திங்களின் தன்மையை உவமை காட்டுவர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் 23 - 6, 76 – 9, 371 - 2 -

இவன் புகழ்மிக்க பாண்டியருள் ஒருவன். பாடினோர் வரலாற்றில் இவனைப்பற்றி வரைந்துள்ள குறிப்புக்களைப் பார்க்கவும். - - பாண்டியன் நெடுஞ்செழியன் - 18, 19

தன்னைப் பகைத்து வந்தவரான எழுவரையும் வென்று மேம்பட்டவன் இவன். இவனுடைய போராண்மையையும், கொடைமாண்பையும் குடபுலவியனார் பாடியுள்ளனர்.