பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476

புறநானூறு - மூலமும் உரையும்


பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - 1, 9, 12, 15, 64

இவன் மறக்கள வேள்விகளோடு, யாகங்களையும் செய் வித்தவன், வள்ளன்மையாற் சிறந்தவன். காரிகிழார், நெட்டிமை யார், நெடும்பல்லியத்தனார் முதலியோராற் பாடப்பெற்றவன். வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி (6) இவன். போர்க் களத்தே, இவன் முதலில் போரிடற்கு ஆகாரை வெளியேறுமாறு எச்சரிப்பதனைக் காண்கின்றோம் (9); அவ்வாறு போக்கிய பின்னர் அறப்போர் செய்தவன் இவன். - பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி - 58

இவன் குராப்பள்ளித் துஞ்சிய திருமாவளவன் காலத்தவன். அவனோடு நட்புக் கொண்டு வாழ்ந்தவன். 'தமிழ் கெழு கூடல்' தண்கோல் வேந்தனாகிய இவனைப் பாடியவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் ஆவர்.

urfi – 105 – 20, 158, 176, 236

முந்நூறு ஊர்களையுடைய பறம்பு நாட்டிற்கும், பறம்பு மலைக்கும் தலைவனாக விளங்கியவன் இவன்; வேளிர் குலத் தலைவன், வாளாண்மையாலும், வள்ளன்மையாலும் தனக்குத் தானே நிகரென விளங்கியவன். மூவேந்தரும் ஒருங்கே முற்றுகையிட்டும் கைப்பற்ற இயலாத வலியமைந்த பறம்பின் தலைவன்; எனினும், அவரால் வஞ்சகமாக அழிக்கப்பட்டவன். இவனைப் பற்றிக் கபிலர் பாடிய செய்யுட்கள் கற்போர் உள்ளங்களைக் கலங்கச் செய்வன ஆகும். தமிழ் வரலாற்றில் ஒரு நிலையான சிறந்த இடத்தைத் தன் மேதகு பண்புகளால் பெற்று விளங்குபவன் இவன்.

பாரி மகளிர் - 112, 200 - 202

பாரி வள்ளலின் பெண் மக்கள் இவர்; அவன் இறப்புக்குப் பின்னர் கபிலரின் ஆதரவால் பேணப்பட்டவர். இவர்கள் வரலாற்றுக் குறிப்புக்களைப் பாடினோர் வரலாற்றுள் காண்க. பிசிராந்தையார் - 67, 184, 191, 212, 215 - 7

பாடினோர் வரலாற்றுக் குறிப்புக்களுள், இவரைப்பற்றிய செய்திகளைக் காண்க.

பிட்டங் கொற்றன் 168 - 72

இவன் மழவர் குடியினன், குதிரை மலைக்கு உரியவன்; சேரர் படை முதலிகளுள் ஒருவன். கொடையாண்மை படையாண்மை களுட் சிறந்தவன். இவனைப் பாடியவர்கள் காவிரிப்பூம்