பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

புறநானூறு - மூலமும் உரையும்


மல்லிகிழான் காரியாதி - 177 -

இவன் குட நாட்டைச் சார்ந்தவன்! ஒரு பகுதித் தலைவனாகப் புகழுடன் விளங்கியவன். இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார் ஆவர். பாண்டியன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவன் இவன். மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன் - 174

மலையமான்களுள் ஒருவனான இவன், சோழர் படைமுதலிகளுள் ஒருவனாகப் பணிசெய்து, ஏனாதிப் பட்டம் பெற்றுச் சிறந்து விளங்கியவன். இவனைப் பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார் ஆவர். ஆகவே, இவனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலத்தவன் எனலாம். இவனை மலையமான் திருமுடிக்காரியின் மகனெனவும் கொள்வர். இச் செய்யுளும் இதற்கு அரண் செய்வதாகும். மலையமான் திருமுடிக் காரி 121, 124, 160

இவன் பெண்ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலூரி லிருந்தவன், முள்ளுர் மலைக்கு உரியவன். கடையேழு வள்ளல்களுள் இவனும் ஒருவன். பெருங் கொடையாளியாகவும், மறமேம்பாடு உடையோனாகவும் விளங்கியவன். இவன், சோழர்க்கும் சேரர்க்கும் படைத்துணையாக விளங்கி அவர்க்கு வெற்றிதேடித் தந்து புகழ் பெற்றவன். இவன் வரலாறு விரிவானது. இவனை அழித்தவன் அதிகமான் நெடுமான் அஞ்சியாவான். இவனைப் பாடியவர்கள் கபிலர், மாறோக்கத்து நப்பசலையார் ஆகியோராவர்.

மலையமான் மக்கள் - 46

இவர்கள் மலையமானின் மக்கள்; சோழன் இவர்களைக்

கொல்விக்க முயன்றபோது, அவனுக்கு அறவுரை கூறி, இவர்களைக் காத்தவர் கோவூர் கிழார் ஆவர். -

மாங்குடி மருதனார் - 72

இவர் தமிழ்ச் சான்றோருள் ஒருவர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.

மாவளத்தான் - 43

இவன் சோழன் நலங்கிள்ளியின் தம்பி, தாமப்பல் கண்ணனாரோடு வட்டுப் பொருதவழி, அவர் கைகரப்ப வெகுண்டு வட்டுக்கொண்டு எறிந்தான். அவர், 'நீ சோழன் மகன்