பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

புறநானூறு - மூலமும் உரையும்



- 25. கூந்தலும் வேலும்!

பாடியவர்: கல்லாடனார். பாடப்பட்டோன்: தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். திணை: வாகை துறை: அரச வாகை

- (தலைவனது வேலைப் புகழ்ந்தது இச் செய்யுள். பகைவரை அழிக்கச் சினந்து எழுந்தகாலை ஞாயிறாகவும், துயருற்றோர்க்கு இரங்கி அருள்கின்ற வேளைத் தண்மதியம் போலவும், 'உருகெழு ஞாயிறு நிலவுத் திகழ் மதியமொடு நிலஞ் சேர்ந்தாங்கு' விளங்கியவன் நெடுஞ்செழியன் என்கிறது செய்யுள்)

மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன்இயல் வழாஅது, உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு, நிலவுத்திகழ் மதியமொடு, நிலஞ்சேர்ந் தாஅங்கு உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை . 5

அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப் பிணியுறு முரசம் கொண்ட காலை, நிலைதிரிபு எறியத், திண்மடை கலங்கிச் சிதைதல்.உய்ந்தன்றோ, நின்வேல்; செழிய, - முலைபொலி ஆகம் உருப்ப நூறி, 10

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்

ஒள்நுதல் மகளிர் கைம்மை கூர,

அவிர்அறல் கடுக்கும் அம்மென்

குவையிரும் கூந்தல் கொய்தல் கண்டே.

இருளைப் போக்கும் இயல்புடைய ஞாயிறு, திங்களோடும் நிலத்தைப் பொருந்த இறங்கியது போன்று, நின்பால் வஞ்சினங் கூறிய இருபெரு வேந்தரும் கொடிய போர்க்களத்தினிடத்தே அழியுமாறு போரிட்டுக் கொன்று, அவரது முரசத்தையும் கைக்கொண்டாய். அப்பொழுது, தம் மார்பகம் அழல அறைந்து கொண்டு, தம் கணவர் போரிற் பட்டதனால் க்ைம்மை பூணும் ஒண்ணுதலார், கரிய தம் கூந்தலைக் களையக் கண்டனை அவர் நிலைக்கு இரங்கிப் போரிடுவதைத் தாமாகவே நிறுத்திற்று நின் கைவேல் ! (மகளிர் துயர்கண்டு செழியனின் போர்வெறி கருணையாக மாறிற்று என்பதால், அவனது இரக்க உள்ளமும் காண்க.)

சொற்பொருள்: 2 கண்டு செலல் ஓங்கிச் செல்லுதல், 7,

பிணியுறு - வாராற் பிணிப்புற்ற, 8. நிலை திரிபு எறிய நின்ற

நிலையிலே நின்று தன்னைச் சூழ்ந்து கொண்ட வீரரைப் புரிந்து