பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

புறநானூறு - மூலமும் உரையும்


முரசையும் கவர்வர். அத்துடனும் அமையாது, பகைவர் முடித்தலைகளை அடுப்பாக்கிக் குருதியைப் புனலாகப் பெய்து, பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு, வெட்டிய தோள்களைத் துடுப்பாகக் கொண்டு துழாவிக் களவேள்வியும் செய்வர். இவ்வாறு, களவேள்வி பல செய்த செழியனே! அடுத்து, நான்மறை முதல்வர் சூழ்ந்திருக்க, அடிப்பட்ட மாமன்னர் ஏவல் செய்ய மறைவேள்வி யியற்றிய வாள்வலியும் உடையவனாகிய செழியனே! வேந்தே! நின் பகைவரும் ஒருவாற்றால் நோன்பு இயற்றிச் சிறந்தவரேயாவர். நின்னுடைய 'மாற்றார் என்ற பெயர் பெற்று, நினக்கு ஆற்றாராய் அவர் மடிந்தாலும், வீர மரணம் எய்திப் புகழ் பெறுகின்றார்கள் அல்லவோ!'

சொற்பொருள்: 1. குட்டத்து - ஆழத்திடத்து. 3. களன் அகற்ற - போர்க்களத்தை இடம் அகலச் செய்ய.

27. புலவர் பாடும் புகழ்!

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப் பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல் துறை: முதுமொழிக் காஞ்சி.

(நிலையாமை கூறி அரசனைக் கொடை வள்ளலாகிப் புகழ் பெறுமாறு வற்புறுத்துவது இச் செய்யுள். பகை எதிர்ந்தோர் கொடாமை வல்லராகுக எனக் கூறுவதனால், நீ கொடை வல்லான் ஆகுக' என்றதும் ஆம்)

சேற்றுவளர் தாமரை பயந்த, ஒண் கேழ், நூற்றிதழ் அலரின் நிறைகண் டன்ன, வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து, வீற்றிருந் தோரை எண்ணுங் காலை, உரையும் பாட்டும் உடையோர் சிலரே; 5

மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே, புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப, என்ப, தம் செய்வினை முடித்து' எனக் கேட்பல்; எந்தை சேட்சென்னி! நலங்கிள்ளி: 10

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், அறியா தோரையும், அறியக் காட்டித், திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், 15