பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

புறநானூறு - மூலமும் உரையும்



பொன்னாற் செய்த தாமரைப் பூவைச், சன்னமாகத் தட்டித் தட்டிக் கம்பியாகச் செய்த வெள்ளி நூலிலே கோத்து அணியாக்கித், தம் கரிய தலையிற் பொலிவுபெறச் சூடிய பாண்சுற்றம் நின் நாள்மகிழ் இருக்கையைச் சூழ்வதாக பாணர் போயினபின், நின் சாந்துபுலர்ந்த மார்பகம் நின் தேவியரைத் தழுவி மகிழ்க! கோயின் முற்றத்தே இனிதாக முரசம் ஒலிக்கக், கொடியோரை ஒறுத்தலும், செவ்வியோரைக் காத்தலும் ஆகிய முறையான அறநெறியிலே, நாளும் சோம்பலின்றி நீ இருப்பாயாக! நல்லதன் நன்ம்ையும், தீயதன் தீமையும் இல்லை என்பாரோடு சேராது விளங்குக! நெல்விளை வயலில், புள் ஒட்டுபவர், பனைமட்டை விறகால் கழியிடத்தே மீனைச் சுட்டு, அதனுடன் வெம்மையான கள்ளினை உண்டும் அமையாது, தெங்கின் இளநீரையும் உதிர்த்துக் கொண்டிருக்கும், வளமிகுந்த நல்ல நாட்டைப் பெற்றனர் நின் படை வீரர். அவர், இனி, வறுமை யுடையோர்பால் இரக்கம் கொண்டவராகிக், கூவையிலையால் வேயப்பட்ட நாற்காற்பந்தரான சிறுமனையாம் பாசறை வாழ்வை நீத்துத், தம்மைத் தேடி வருபவருக்கு மனமுவந்து உதவிசெய்யும் நண்பென்னும் நற்பண்பு உடையவராகுக! இதற்கு ஏற்ற முறைகளையே நீ இனிச் செய்வாயாக. விழாவிலே ஆடும் கூத்தரைப்போல வகைவகையாக ஆடிக் கழிவதுதான் இவ்வுலக வாழ்வு. இதன்கண், நின் சுற்றம் என்றும் மகிழ்விலே திளைப்பதாக! நீ பாதுகாக்கும் பொருள் புகழ் பெறுவதாக! (போர்ப் படையினர், போர் முடிவுற்றதும், நாட்டு நல்வாழ்விலே ஈடுபட வேண்டும் என்று உரைப்பது இது) - . .

சொற்பொருள்: 2 ஐது - அழகிது. 4. பாறு மயிர் - பொலிவற்ற மயிர். 5 நாண்மகிழ் இருக்கை - காலையில் யாவரும் தன்னைக் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருத்தல்; இது நாளவை எனவும் கூறப்படும். 6 பாண்முற்று - பாணர் சுற்றம் சூழ்தல். 12. இனன் ஆகிலியர் - இனமாகா தொழிவாயாக. 15. வெங்கள் - வெய்ய மது; வேண்டாதார்க்கு வெறுப்பும், வேண்டியவர்க்கு விருப்பமும் செய்தலின், 'வெங்கள்’ என்றார். 19. துற்ற கூவையிலையால் வேயப்பட்ட

30. எங்ங்ணம் பாடுவர்?

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: தலைவனின் இயல்பு கூறுதல்,

('அறிவு அறிவாகச் செறிவினையாகி. ஒளித்த துப்பினை' என நலங்கிள்ளியின் இயல்பைக் கூறினமையால், இது இயன் மொழி வாழ்த்து ஆயிற்று. 'செஞ்ஞாயிற்றுச் செலவும். இனைத்து