பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

geogiả csásdi - , 45

என்போரும் உளரே என்றது, அக் காலத்திலிருந்த வானியல் ஆய்வாளரது நுண்ணறிவுத் திறனைக் காட்டி வியந்தது ஆகும்)

செஞ்ஞாயிற்றுச் செலவும் - அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளி திரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும், என்றிவை 5

சென்றளந்து அறிந்தார் போல, என்றும் இனைத்து என்போரும் உளரே, அனைத்தும் அறிவுஅறிவாகச் செறிவினை யாகிக் களிறுகவுள் அடுத்த எறிகல் போல . ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட - 10

யாங்ங்ணம் பாடுவர், புலவர்? கூம்பொடு மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது, புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் இடைப்புலப் பெருவழிச் சொரியும் கடல்பல் தாரத்த நாடுகிழவோயோ! 15

- செஞ்ஞாயிற்றின் செலவும், அஞ்ஞாயிற்றின் இயக்கமும்

இயக்கத்தால் சூழப்படும் மண்டிலமும், காற்றுச் செல்லும் திசையும், ஆதாரமின்றி நிற்கும் வானமும், என்றிவற்றைத் தாமே அவ்வவ்விடஞ் சென்று அளந்து அறிந்தவரைப் போல, இஃதிஃது இப்படிப்பட்டது என் உரைக்கும் அறிவுடையோரும் உளர். அத்தகைய நுண்ணறிவினார்க்கும் அறியவியலாப் பேரறிவுச் செறிவுடன், யானை, கதுப்பின்கண் அடக்கி எறியும் கல்போல, நின் வலிமையை நீ நின்னுள்ளேயே மறைத்தபடி அடக்கமுடன் விளங்குகிறாய். நின்னைப் புலவர்தாம் எங்ங்னம் பாடுவர்? கூம்புடன் மேற்பாயினையும் களையாது, மேற்பாரமும் அகற்றாது, ஆற்றுமுகத்துள் புகுந்த பெருங்கலத்தில் வந்த பொருளைப், பரதவர், இடைப்புலப் பெருவழிக்கண்ணே கொண்டுசெல்லுங் காலத்திலே, பொருளின் செழுமையால் அருமையறியாது வழிநெடுகச் சொரிந்து கொண்டே கவலையின்றிச் செல்வர். அத்தகைய பெரிய வளநாட்டவன்ன்றோ நீ!

சொற்பொருள்: 1. செலவும் - வீதியும். 5. காயம் - ஆகாயம். 9. செறிவு - அடக்கம். 12. தோண்டாது பறியாமல். புகா அர் - ஆற்றுமுகம் தகாஅர் - பரதவரும், அளவரும். அளவர் உப்பு விளைப்போர். 16. தாரத்த - பண்டத்தையுடைய, 'பரிப்பு' என்றது, இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனைத் தொலைவு செல்லும் என்னும் இயக்கவேகத்தை.