பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

புறநானூறு - மூலமும் உரையும்


ஈடாகத் தந்துவிடும் இயல்பினன். ஒண்ணுதல் விறலியர் அவனை மகிழ்வித்துப் பூ விலை தருதி' என வேண்டினால், மாட மதுரையையே அவர்க்கு மனமகிழ்ந்து வழங்கிவிடுவான். ஆகவே, “பரிசில் மாக்களே! எல்லாரும் அவனையே பாடலாம் வாருங்கள்! பழையதான இம் மண்ணின் உரிமை எவருக்கு என ஆராய்ந்தால், நல்ல மதி நுட்பமுடைய வேட்கோவர் குலச்சிறுவர் திகிரியில் வைத்த பசுமண், அவர் கருத்துப் போலெல்லாம் உருவெடுத் தலைப் போல, இச் சோழன் கொண்ட கருத்தைப் பொறுத்தே இம் மருதநில நாடும், அதன் உரிமையும் எனக் கொள்வீராக” என்கிறார் புலவர். (சோழன் தன் கருத்தைச் செயற்படுத்தும் ஆற்றல் மிகுந்தவன் என்பது கருத்து) -

சொற்பொருள்: 2. பூவா வஞ்சி என்றது, கருவூரை, 3. இறை - சந்து பொருத்தப்பட்ட வளையல், 8. வேட் கோச்சிறாஅர் - குயக்குலத்து இளையோர். தேர்க்கால் - சக்கரம். 10. குடுமித்து முடியை யுடையது.

33. புதுப்பூம் பள்ளி!

f

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. சிறப்பு: பகைவரது கோட்டைகளைக் கைப்பற்றியவுடன், அவற்றின் கதவுகளில் வெற்றிபெற்றோன் தனது அரச முத்திரையைப் பதிக்கும் மரபு பற்றிய செய்தி.

(சோழனின் வெற்றி மேம்பாட்டைக் கூறுதலால், இச் செய்யுள் அரச வாகை ஆயிற்று. ‘ஏழெயில்’ என்பது ஒரு கோட்டை ஒன்றுள் ஒன்றாக அமைந்த ஏழு கோட்டைகளைக் கொண்டது; ஆதலின் பிறராற் கைப்பற்றுதலுக்கு அரியது; அதனையும் வென்றவன் இவன் என்பது சிறப்பு)

கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன், மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள் தயிர்கொடு வந்த தசும்பும், நிறைய, ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5

முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும், ஏழெயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின் பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை; பாடுநர் வஞ்சி பாடப், படையோர் 10