பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

49


தாதுஎரு மருகின் பாசறை பொலியப், புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்துகண் டன்ன ஊன்சோற் றமலை பாண்கடும்பு அருத்தும் செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை: 15

வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக் காம இருவர் அல்லது, யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின், ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி - 20

வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

கானிலே வாழும் வாழ்க்கையினன் வேட்டுவன். சின மிகுந்த நாயுடன் அவன் வருவான். மான் தசையினை வட்டியிலே கொண்டுவந்து உழவர் வீட்டிலே சொரிவான். ஆய் மகளும் பானையிலே தயிரைக் கொண்டுவந்து தருவாள். இவ்விருவரும் இவ்வாறு தர, ஏரினால் வாழ்பவரின் பெருவீட்டுப் பெண்கள், குளத்திற்குக் கீழ்ப்புற வயல்களில் விளைந்த, களங்கொண்ட வெள்ளை நெல்லை முகந்து முகந்து அவ் வட்டியும் பானையும் நிறையுமாறு கொடுப்பர். அவரும், அது பெற்று மகிழ்ந்து செல்வர். பொதிய மலையினையுடைய பாண்டியரின் நன்னாடு, அத் துணைப் பெருவளமுடையது. அவ் வளநாட்டிலுள்ள ஏழெயில் கோட்டைக் கதவை உடைத்து, அதனைக் கைப்பற்றி, நின் புலி இலச்சினையை அதன்கண் பொறித்த போர் ஆற்றலுடையவன் நீ புலவர் நின் மேற்செலவைப் பாடவும், படைக்கலங் கொண்டோர் தாதெரு மருகின் பாசறையிற் செம்மாந்து விளங்கவும், பாண் சுற்றத்திற்கு அவ்விடத்திலும் ஊனும் சோறும் கலந்த உருண்டைகளை நீ அளிக்கவுமாகச் சிறப்புற்று விளங்குவது நின் போர்முனைப் பாசறை. கலைவல்லோன் செய்த அல்லிப் பாவைகள் அல்லிக்கூத்து ஆடுவது போன்று, ஒத்த அழகும். அன்பும் உடைய துணைவனும் துணைவியுமாகிய இருவர் அல்லாது, சாம வேளையிலே, தனிமகன் வரக்கூடாத பணி மலர்க்காவின் ஓரத்திலே, நீ எடுத்துச் செய்த விழாவினை என்னென்பேன்! இயங்குவதற்கு இனிய செறிந்த மணலையும், புதிய பூவையும் உடைய சாலையினது வாயில் மாடந்தோறும் செம்மறிக் கிடாக்களை வெட்டி, நீ நடத்தும் சிறுசோற்று விழாவினும், நின் பாசறைக் காட்சி பெரிதும் சிறப்பு உடையதேயாகும்.