பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

புறநானூறு - மூலமும் உரையும்



சொற்பொருள்: 1. கதநாய் - சினம் பொருந்திய நாய், 5. களம்கொள் - களத்தின்கண் கொள்ளப்பட்ட 7. பொருப்பன் - பாண்டியன், 8. ஏழெயிற் கதவம் - ஏழெயில் என்பது சிவகங்கை யைச் சார்ந்துள்ள எழு பொன்கோட்டை - என்னும் ஊராக இருக்கலாம். 12. இடையிடுபு - இடையிட்டு. 14. ஊன்சோற்று அமலை - தசையோடு கூடிய பெருஞ் சோற்றுத் திரளை. 17. அல்லிப்பாவை அல்லியம் என்னும் கூத்தையாடும்பாவை.18 காம இருவர் அன்பினையுடைய துணைவனும் துணைவியு மாகிய இருவர். -

34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

பாடியவர்: ஆலத்துர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. சிறப்பு: செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ என்னும் அறநெறி பற்றிய செய்தி

(வளவனின் இயல்பை வியந்து பாராட்டிக் கூறுதலால், இது இயன்மொழி ஆயிற்று பரிசில் பெற்றுப் போகின்றானை எம்மை இனியும் நினைத்து வருவையோ? என்றான் வளவன். அது கேட்ட அவன், தன் நன்றியுணர்வு வெளிப்படச் சொல்லியதாகவும் இதனைக் கொள்க. 'வாழ்த்து' என்னும் துறைக்கு எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர் (தொல், புறத், சூ29)

'ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும், மாண் இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள' என, 'நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன் 5

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என, அறம் பாடின்றே ஆயிழை கணவ! 'காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் - பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக் . 10

குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு . அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15

எங்கோன் வளவன் வாழ்க!' என்று, நின்

பீடுகெழு நோன்தோள் பாடேன் ஆயின்,