பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

புறநானூறு - மூலமும் உரையும்



கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச், செம்புஉறழ் புரிசைச், செம்மல் மூதூர், 10 வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின், 'நல்ல என்னாது, சிதைத்தல் வவ்லையால் நெடுந்தகை! செருவத் தானே!

புறாவின் துயரினைப் போக்கிய செம்பியன் மரபினனே! சினமிகுந்த வேல் தாங்கிய படையை உடையவனே! முதலைகள் நிறைந்த அகழியினையும், இரவு வேளையிலே, ஊர் காப்பாரின் விளக்கு நிழலைக் கவரும் முதலைகள் திரண்டிருக்கும் நீர் நிறைந்த மடுவினையும், செம்பாற் செய்தாற்போலும் மதிலையுமுடையது, தலைமையோடு விளங்கிய மிகப்பழைய அரண். கச்சணிந்த யானைப் படையுடன் வலிபொருந்திய அரசும் அங்கே இருந்தது. அவற்றை நல்லன என்றும் பாராது, நச்சுப்பற்களும் ஐந்தலையும் உடைய நாகம் புக்கது போல் புகுந்து, வானம் செவ்விருள்பட அவ்வூரை எரியூட்டி அழித்து, வானத்தும் செந்தி எழச் செய்தாய். மலைமுழையின் கண்ணே இடிமுழக்கம் எதிர் ஒலித்தாற்போல, அவ்வூரினுள் புகுந்து அதனை அழித்துப் போரிட்டு வெல்லும் வல்லமையுடையவனாகவும் இருந்தாய்! பெருந்தகாய்! நின் முன்னோர் அருளும் நின் கொடிய வன்மையும் இருந்தவாறு என்னே (பழிப்பது போலப் புகழ்ந்து உரைத்தது இது)

சொற்பொருள்: 2. தீப்பிறப்பத் திருகி - வானம் - தீப்பரக்கும் பரிசு முறுகி. 6 செம்பியன் - சிபிச்சக்கரவர்த்தி என்பர் 7, கராம் - முதலையுள் ஒரு சாதி, 8. கருங்குட்டத்து-கரிதாகிய ஆழத்தின்கண். 9. யாமம் கொள்பவர் - இடையாமத்து ஊர்க்காப்பாளருடைய. சுடர் விளக்கு கது.உம் - கவரும். 10. கடுமுரண் - கடிய மாறுபாடு இலஞ்சி - மடு, 11. செம்பு உறழ் - செம்பு பொருவும். செம்மல் - தலைமை.12. வம்பு - கச்சு, 13 செருவத்தான் - போரின்கண்.

38. வேண்டியது விளைக்கும் வேந்தன்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: இயன்மொழி. குறிப்பு: “எம் முள்ளிர், எந் நாட்டீர்?' என்று அவன் கேட்ப, அவர் பாடியது.

('நீ உடன்று நோக்கும் என்பது முதலியவற்றால், அரசனது இயல்பைக் கூறினமையின், இது இயன்மொழி ஆயிற்று. புகழ்ச்சிக்கண் வந்த செந்துறைப் பாடாண் பாட்டிற்கு எடுத்துக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். புறத்சூ,27), உடையரும் இல்லோருமாதலும், இறப்போரும் பிறப்போரும் ஆதலும், முன்வினைப் பயனால் வந்தடைவன எனக் கூறுகின்றார் புலவர்)