பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

57


வரை புரையும் மழகளிற்றின் மிசை, வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும்! வியன் தானை விறல் வேந்தே! நீ உடன்று நோக்கும்வாய் எரிதாழ 5 நீ நயந்து நோக்கும் வாய் பொன்பூப்பச். செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின், நின்நிழல் பிறந்து, நின்நிழல் வளர்ந்த, 10 எம் அளவு எவனோ மற்றே? இன்நிலைப் பொலம்பூங் காவின் நன்னாட் டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை, உடையோர் ஈதலும், இல்லோர் இரத்தலும் கடவ தன்மையின், கையறவு உடைத்து, என 15

ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின், நின்நாடு உள்ளுவர், பரிசிலர்: ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத் தெனவே.

குன்றுகளைப் போன்ற இளங் களிறுகளின் மீது வானத்தையே தடவுவன போன்று பலநிறக் கொடிகள் அசைந்து தோன்றும், பரந்த படைத்திரளை உடைய, ஆற்றல் மிகுந்த வேந்தனே! நீ சினங்கொண்டு பார்க்கும் இடத்திலே எரி பரக்கும். நீ அருள்கொண்டு பார்க்கும் இடத்திலோ பொன் பொலியும். ஞாயிற்றிலே நிலவு உண்டாக என்றாலும், நிலவிலே வெயில் உண்டாக என்றாலும், விரும்பினால், அவ்வாறே உண்டாக்கும் வலிமையுடையவன் நீ! விண்ணவர், உலகில் தாம் செய்த நல்வினைக்கு ஏற்பப் போகம் நுகர்ந்து அங்கே இன்புறுவர் என்பர். அஃதன்றிச், செல்வர் வறியோர்க்கு வழங்கலும், வறியோர் செல்வரிடத்தே அவர் பரிசை நாடிச் செல்லலும் அங்கே கிடையாது. அது நின் நாட்டிலேதான் நிகழும்! எனவே, பகைவர் நாட்டுப்பரிசிலரும், நின் நாடு நின்னை உடையதாகின்றது என்றும், அந்த விண்ணுலகினும் இல்லாத இன்பம் இங்கே உளது என்றும் கருதியவராக நின் நாட்டையே நினைத்துக் கொண்டிருப்பர். அங்ங்ணமிருக்க, நின் நிழலிலேயே பிறந்து வளர்ந்த எம் நினைவின் எல்லையைப் பற்றி, ஏதும் அளவிட்டுச் சொல்லவும் முடியுமோ?

சொற்பொருள்: பொன் பூப்ப-பொன் பொலிய.11.எம் அளவு - எமது நினைவின் எல்லை.12. மருங்கின் - இன்பத்தின் பக்கத்தை