பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

புறநானூறு - மூலமும் உரையும்


13 எய்தல் அல்லதை பொருந்துவதல்லது.15. கடவது அன்மையின் ஆண்டுச் செய்யக் கடவது இன்மையால் 18 தேஎத்தும் - தேயத்து இருந்தும். t 39. புகழினும் சிறந்த சிறப்பு!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண் துறை: இயன் மொழி. சிறப்பு: வளவன் வஞ்சியை வெற்றி கொண்டது. -

( தலைவன் செய்தியையும், அவன் மரபினோர் செய்தியை யும் உரைத்தமையால் இச் செய்யுள் இயன்மொழி ஆயிற்று. ஈதல், அடுதல், முறைமை என்பவற்றுள் சிறந்தோனாகவும், போர் மறத்துள் ஒப்பற்றோனாகவும் வளவனை வியந்து பாடுகின்றார் புலவர். புறவின் அல்லலைத் தீர்த்தோனைப் பற்றிய குறிப்பும், தூங்கெயில் எறிந்த செம்பியனது மறமாண்பு பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. 'தூங்கு எயில் என்பது தற்காலத்தைய குண்டு வீச்சு விமானங்களைப் போல்வதொரு சாதனமாயிருக்கலாம்)

புறவின் அல்லல் சொல்லிய, கறையடி யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக! ஈதல்நின் புகழும் அன்றே; சார்தல் ஒன்னார் உட்கும் துன்னரும் கடுந்திறல் 5 தூங்கெயில் எறிந்தநின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல்நின் புகழும் அன்றே, கெடுவின்று, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து, அறம்நின்று நிலையிற் றாகலின், அதனால் முறைமைநின் புகழும் அன்றே; மறம்மிக்கு, 10 எழுசமம் கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ! யாங்கனம் மொழிகோ யானே; ஓங்கிய வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி, 15

மாண்வினை நெடுந்தேர், வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும்நின் பீடுகெழு நோன்தாள் பாடுங் காலே?

புறாவினது அல்லலைத் தீர்க்கத் தானே துலை ஏறி அமர்ந்த அருளாளனாகிய செம்பியனின் மரபினன் நீ ஆதலால் நீயுமோர்