பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

μωμιάααααα 59.

ஈகைக்குணம் உடையவனாதல் நினக்குப் புகழ் அன்று. தூங்கு எழில் அழித்து வென்ற நின் முன்னோரை நினைத்தால், போர்களில் வெற்றி கொள்வதுங்கூட நினக்குப் புகழ் அன்று. கேடின்றி வீரம் செறிந்த சோழரின் உறையூர் அவையினிடத்தே அறம் என்றும் நிலைபெற்று நிற்கும்; ஆதலின், நீ முறைமை செய்தாயென்பதும் நினக்குப் புகழ் தருவதன்று. இமயத்திலே பொறித்த விற்பொறியையும், நெடிய தேரையும் உடையவனான சேரனை வென்று, அவனது கருவூர்க் கோட்டையையும் அழித்த நின் முயற்சிச் சிறப்பை யான் எவ்வாறு கூறுவேன்! கணைய மரமும் ஒவ்வாத தசைசெறிந்த திண்தோளும், கண்ணுக்கினிய மாலையும், மனஞ்செருக்கிய குதிரையும் உடையவனே! நீயே கூறுவாயாக!

சொற்பொருள்: 2. வான்மருப்பு எறிந்த-வெளியே கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட 4. உட்கும் - கிட்டுதற்கு வெருவும். 6. தூங்கு எயில் ஆகாயத்து மதில்.11 எழு கணையமரம்.12. கலிமான் - மனம் செருக்கிய குதிரை. 18. தாள் - முயற்சி.

40. ஒரு பிடியும் எழு களிரும்! பாடியவர்: ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். திணை: பாடாண். துறை: செவியறிவுறுஉ -

('என்றும் இன்சொல் எண் பதத்தை ஆகுமதி' என அறத்தாறு கூறி அறிவுறுத்தலின், செவியறிவுறுஉ ஆயிற்று. ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் நாடு’ என்றது. அந் நாட்டது வளமையை வியந்ததாம். இதனால், அந் நாட்டார் பசியற்று நல்வாழ்வினராகத் திகழ்ந்ததும் பெறப்படும். செவியறி வுறுத்தற்கு இச் செய்யுளை நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர்) . - -

நீயே, பிறர் ஒம்புறு மறமன்னெயில் ஒம்பாது கடந்தட்டு, அவர் முடி புனைந்த பசும் பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய * . வல் லாளனை; வய வேந்தே! 5 யாமே நின், இகழ் பாடுவோர் எருத்தடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, இன்றுகண் டாங்குக் காண்குவம்; என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி, பெரும! ஒருபிடி படியுஞ் சீறிடம் - , سہ - எழுகளிறு புரக்கும் நாடுகிழவோயே! 1 O