பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

63


எல்லை இல்லாத வள்ளன்மையும், போரிட்டு வெல்லும் - ஆற்றலும் உடைய அண்ணலே! நின் யானையும் மலைபோலத் தோன்றும் நின் படையும் கடல்போல் முழங்கும். கூர்மையான முனையுடைய நின் வேலும் விட்டுவிட்டு மின்னலைப்போல ஒளிவீசும் இவ்வாறு, பிற அரசுகள் நடுங்கும் அளவு நீ வலிமை உடையவனாதலால், எங்கும் குற்றங்கள் தீர்ந்தன. இது நினக்கு. மட்டும் புதுமை அன்று நின் மரபினர்க்கு இயல்பாக வரும் பழமையே யாகும். குளிர்ந்த நீர்ப்பெருக்கின் ஒலியல்லாது வருந்தி, "வாழி வளவ! எம் துயரினைத் தீர்ப்பாயாக’ என்று, நின்முன்வந்து நின்படையினர் பூசலிடுவதைக் கனவிலும் காணாதவன் நீ. அனைவரையும், புலி தன் குட்டிகளைக் காப்பதுபோலச் செவ்வையாகப் பேணிக் காத்து வருபவனும் நீ பெருஞ்சிறப்புடன் புது வருவாய் மலிந்தது நின் நாடு, நெல் அறுப்பவர் கடைமடை யிடத்தே வாளை மீனைப் பிடித்து வருவர். உழுபவர், கொழு முனையைத் தடுத்து நிற்கும் ஆமைகளைப் பிடித்துக் கொணர்வர். கரும்பறுப்பவர் கரும்பினின்று தேன் எடுத்துக் கொணர்வர். துறையிலே நீர்முகக்க வரும் பெண்கள் செங்கழுநீர்ப் பூவினைப் பறித்துச் செல்வர். இவற்றை எல்லாம், நின் நாட்டு வேளாண் மக்கள் வறண்ட நாட்டிலிருந்து வரும் தம் சுற்றத்தார்க்கு விருப்பமுடன் விருந்தாகக் கொடுத்து மகிழ்வர். இத்தகைய பல ஊர்களை உடையது நினது நாடு. அவ் வளநாட்டின் வேந்தனே! பலவாக மலையினின்றும் இழிந்து, நிலத்தையுங் கடந்து, கடலை நோக்கிச் செல்லும் கானாறுகளைப்போலப் புலவர் யாவரும் நின்னையே நோக்கி வருகின்றனர். அவருக்குப் பரிசில் அளிப்பதற் காகக் கணிச்சி என்னும் படைக்கலத்தை உயிர்வருந்தச் சுழற்றிக் கூற்றம் சினந்தாற் போல, நினக்கு மாறுபட்ட இருவேந்தர் நிலத்தையும் வென்று ஆட்படுத்தினாய். வளவனே! நீ வாழ்வாயாக!

சொற்பொருள்: 5. தலைபனிக்கும் - தலைநடுங்குதற்கு ஏதுவாகிய, 7 தண்புனல் பூசல் - குளிர்ந்த நீரால் உளதாகிய பூசல். 9. முனைதரு பூசல் - நினது முந்துற்றுச் செல்லும் படை யுண்டாக்கும் பூசல், பூசல் ஆரவாரம்.10. குருளை புலிக்குட்டி.12. அரிநர் - நெல்லறுப்போர். 12. கீழ்மடைக்கொண்ட கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட 14. படை மிளிர்ந்திட்ட - படைவாளால் மறிக்கப்பட்ட அறைநர் - கரும்பு அறுப்போர் 16. குற்ற பறித்துக் கொண்ட் 17 வன்புலம் - குறிஞ்சியும் முல்லையும், 18 மென்புலம் - மருதமும் நெய்தலும், 22 மருந்து இல் - பரிகாரம் இல்லாத 22 கணிச்சி - குந்தாலிப் படை