பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

65


பகைவரை வென்ற சிறப்பும், மிக்க செல்வமும் உடைய தேர்வண் கிள்ளியின் தம்பியே! நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினை யும் உடைய மறவர்களின் தலைவனே! விரைந்த குதிரையை உடையவனே! கை வண்மையான தோன்றலே! “நின் பிறப்பையே நான் ஐயுறுகின்றேன். நின் முன்னோர் எவரும், பார்ப்பார் துன்புற எதனையும் செய்யார். மற்றும் நினக்கு மட்டும் இவ் வெறுக்கத்தக்க செய்கை நியாயமோ?” எனக்கூறி, நீ என்னை வெறுக்குமாறு தவறு செய்தேன். அது கண்டும், நீ என்னை வெறாது, நின் உத்தம குணத்தால், நீயே பிழை செய்தாய்போல மிகவும் நாணங் கொண்டவனாயினாய். தம்மைப் பிழைத்தலர்களைப் பொறுக்கும் பெருந்தகைமை இச்சோழர் குடியில் பிறந்தவர்க்கு எளிது; இதோ காணும் எனவும் காட்டினை. வலியுடையவனே தவறு செய்தவன் யானே! பெருகிவரும் காவிரி மணலினும் நின் வாழ்நாள் பலவாகப் பெருக, நீ நீண்ட காலம் வாழ்வாயாக!

சொற்பொருள்: 3. கால் உணவாக - காற்றை உணவாகக் கொண்டு. கொட்கும் - சூழ வரும் 4. மருள - வியப்பால் மயங்க 5. ஏறு குறித்து - எறிதலைக் கருதி. ஒரீஇ - அதனைத் தப்பி. 7. தபுதி - அழிவு. கீரைபுக்க தன் அழிவிற்கு அஞ்சாது துலாத்தலையுள் புக்க9. முரண்மிகு மாறுபாட்டான் மிக்க.10. வார்கோல் நீண்ட அம்பு. 1. கொடு மரம் - வளைந்த வில்.

44. அறமும் மறமும்!

பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன்

நெடுங்கிள்ளி. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு:

நலங்கிள்ளி ஆவூரை முற்றியிருந்தான்; அதுகாலை அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கண்டு பாடியது, இச் செய்யுள்.

(அகத்து அரசற்கு அழிந்து கூறியதற்கு இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் (புறத். சூ. 10). நினது எனத் திறத்தல்; அல்லது போரொடு திறத்தல் அரசர்க்குரிய இயல்பு' என்று நினைந்து கூறினமையின், அரச வாகை ஆயிற்று)

இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா, நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ, திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி, நிலமிசைப் புரளும் கைய, வெய்துயிர்த்து, அலமரல் யானை உருமென முழங்கவும், 5

பாலில் குழவி அலறவும், மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும், நீரில்