பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

புறநானூறு - மூலமும் உரையும்



வினைபுனை நல்லில் இணைகூஉக் கேட்பவும், இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்! 1 * 10 அறவை யாயின், நினது எனத் திறத்தல்; மறவை யாயின், போரொடு திறத்தல்; அறவையும் மறவையும் அல்லை யாகத் திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் 15 நானுத்தகவுடைத்திது காணுங் காலே. பசி மிகுந்த யானைகள் உணவு பெறாது, கட்டிய கம்பம் வருந்தச் சாய்ந்து, நிலத்திற் புறண்டு, இடியேறுபோலப் பிளிறுகின்றன. பாலில்லாதவாய்க் குழந்தைகள் அழுகின்றன. மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிக்கின்றனர். நல்ல வீட்டிலும் குடிநீர் இன்றி வருந்தி மக்கள் கதறுகின்றனர். இவையெல்லாம் கேட்டும் நாணங்கொள்ளாது இங்கு இனிதாக நீ இருப்பது மிகவும் தவறானது. நெருங்க முடியாத ஆற்றல் மிகுந்த குதிரைகளையுடைய தலைவனே! அறத்தை உடையவனானால், 'இது நின் கோட்டைதானே எனக் கூறித் திறந்து விட்டுவிடு. அன்றி, வீரம் உடையவன் என்றால், போர் செய்வதற்காகக் கதவைத் திறந்து எதிர்த்துச் செல். இரண்டும் செய்யாது, மதிற் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளே ஒளிந்திருத்தல் வெட்கக்கேடு ஆகும் (சோழனை இடித்துரைக்கிறார் புலவர்)

சொற்பொருள்: நெய்ம்மிதி - நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளம் பெறா.ஆ பெறாவாய், 3. அரை - மருங்கு. நோன் வெளில் வலிய கம்பம், 8. இணைகூஉக் கேட்பவும் வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக்கேட்பவும்.11.அறவை-அறத்தையுடையை. 12. மறவை ஆயின் மறத்தையுடையை ஆயின், வீரம் உடைய ஆயின் 14 திண்நிலைக் கதவு-திண்ணிய நிலையையுடைய மதிலின் கதவு. -

45. தோற்பது நும் குடியே! பாடியவர்: கோவூர் கிழார். பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. குறிப்பு: முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் பாடிய செய்யுள் இது.

('நும்மோரன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகை செய்யும்; குடிப் பொருள் தருவதும் அன்று; இருவரும் வென்றி காணல் இயற்கையும் அன்று’ என்பன கூறிச் சந்து செய்தலால், இது துணை வஞ்சி ஆயிற்று) - - -