பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

69


வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீ தறிந் தன்றோ? இன்றே, திறப் பட நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி, ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ் மண்ணாள் செல்வம் எய்திய 10 நூம்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

"பழமரம் நாடிச்செல்வன பறவை இனம். அவைபோல, நீண்ட அரிய வழிபலவும் கடந்து, தமக்கு வழங்குபவரை நாடிச் செல்பவர் பரிசிலர்கள். அங்கு தம் வல்லமைக்கு ஏற்பப் பாடிப் பெறும் பரிசிலால் மகிழ்பவர். அப் பொருள் கொண்டு தம் சுற்றத்தை உணவளித்துக் காப்பவர். பொருளை மிகுத்துக் காப்பதும் இவர்கள் இயல்பன்று. தாமும் உண்டு பிறர்க்கும் மனமகிழ்வுடன் வழங்குபவர் இவர். தம்மைப் புரப்போரால் பெறும் சிறப்புக்காக இவ்வாறு வருந்தி நாளும் அலைவதே இப் பரிசிலர்களுடைய வாழ்க்கையின் தன்மையாகும். பிறர்க்குக் கொடுமை செய்ய அறிந்தவரோ இவர் எனின், இல்லை. கல்வியால் தம்முடன் மலைந்தவரை, அவர் நாண வென்று, செம்மாந்து நடந்து, அவ்விடத்தில் இனிதாக இவர் ஒழுகுபவர். வேந்தே! அவ்வாறு நிகழும்போது, "ஓங்கு புகழுடன் நிலம் ஆளும் தும்போன்ற சீரும் உடையோர் இவராவர்” (பரிசிலர் தன்மைகளைக் கூறி, அப் புலவரைக் காத்தனர் கோவூர்கிழார்).

சொற்பொருள்: 1.படர்ந்து - நினைந்து. புள்ளிற்போகி - பழமரம் தேடும் பறவை போலப் போகி. 3 வடியா - திருந்தாத 5. கூம்பாது வீசி உள்ளம் மலர்ந்து வழங்கி, 8. நண்ணார் - கல்வி முகத்தால் தம்மொடு மலைந்தோர். அண்ணாந்து ஏகி - வென்றதனால் தலையெடுத்து நடந்து. - - -

48. கண்டனம் என நினை!

பாடியவர்: பொய்கையார். பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன். திணை: பாடாண். துறை: புலவராற்றுப் L160L.

(தலைவனது இயல்பையும் ஊரையும் உரைத்து 'முதுவாய் இரவல! எம்மும் உள்ளெனத் தம் தலைமை தோன்றக் கூறினர். இதனால், இது புலவராற்றுப்படை ஆயிற்று)

கோதை மார்பிற் கோதை யானும், கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும், மாக்கழி மலர்ந்த நெய்தலானும்,