பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - 71 சொற்பொருள்: 5 இறங்கு - வளைந்த அலமரு சுழலுகின்ற. 6. சேர்ப்பினும் - கடற்கரைக் கண்ணும். நாடன், ஊரன், சேர்ப்பன் என்பன முறையே குறிஞ்சி, மருத, நெய்தல் நிலத் தலைவரின், பெயர்கள்.

50. கவரி வீசிய காவலன்!

- பாடியவர்: மோசிகீரனார். பாடப்பட்டோன்: சேரமான் தகடூர்

எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை. திணை: பாடாண். துறை: இயன் மொழி. குறிப்பு: அறியாது முரசுகட்டிலில் ஏறியவரைத் தண்டம் செய்யாது துயில் எழுந்துணையும் கவரிகொண்டு வீசினன் சேரமான், அது குறித்துப் புலவர் பாடிய செய்யுள் இது.

(அரசனது இயல்பை வியந்து கூறினமையால், இயன் மொழி ஆயிற்று. 'முரசு நாட்கோடலுக்கு அடியார்க்கு நல்லார் எடுத்துக் காட்டுவர் (சிலப். 589 - 94 உரை) -

மாசற விசித்த வார்புஉறு வள்பின் மைபடு மருங்குல் பொலிய, மஞ்ஞை ஒலிநெடும் பீலி ஒண்பொறி, மணித்தார், பொலங்குழை உழிஞையொடு, பொலியச் சூட்டிக், குருதி வேட்கை உருகெழு முரசம் 5

மண்ணி வாரா அளவை, எண்ணெய் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை அது உம் சாலும், நற்றமிழ் முழுது அறிதல், 10

அதனொடும் அமையாது, அணுக வந்து, நின் மதனுடை முழுவுத்தோள் ஒச்சித், தண்ணென வீசியோயே, வியலிடம் கமழ, இவண்இசை உடையோர்க்கு அல்லது, அவனது உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை 15

விளங்கக் கேட்ட மாறுகொல், வலம்படு குருசில், நீ ஈங்குஇது செயலே?

- வீர முரசும் கட்டிலினின்றும் நீராடக் கொண்டு செல்லப் பட்டிருந்தது. அவ்வேளை, எண்ணெய் நுரை முகந்தாற்போல மெல்லிய பூ விரித்துக் கிடந்த இம் முரசு கட்டிலில் உண்மை அறியாது உறங்கிக் கிடந்தேன். அவ்வாறு கிடந்த என்னை இருகூறாக்காது, நின் வாளை மாற்றியதொன்றே தமிழறிந்தாரை மதிக்கும் நின் மாண்பினை உணர்த்தப் போதுமானதாகும்.