பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

புறநானூறு - மூலமும் உரையும்


அத்துடனும் அமையாது, அருகே வந்து, நின் வலிய முழவுத்தோளால் விசிறி கொண்டும் குளிர வீசி நின்றனை வெற்றி பொருந்தும் தலைவனே! இங்கே புகழ் உடையவர்க்கு அல்லாது பிறருக்கு உயர்நிலை உலகத்து வாழ்வு கிடையாது’ என்ற உண்மையை விளங்கக் கேட்டதனாலோ, நீ இவ்வாறு இங்கே இப்படிச் செய்தனை, பெருமானே!

சொற்பொருள்: 1 வள்பின் - வாரையுடைய 2. மைபடு மருங்குல் பொலிய கருமரத்தாற் செய்தலான், இருட்சி பொருந்திய பக்கம் பொலிவு பெற, 6. மண்ணி - நீராடி 8. தெறுவர - வெருட்சி தோன்ற, 9. வாள்வாய் ஒழித்ததை - வாளினது வாயை மாற்றியதாகிய, 12. மதனுடை - வலியையுடைய 12. தண்ணென வீசியோய் - சாமரத்தாற் குளிர வீசியவனே! - 51. ஈசலும் எதிர்ந்தோரும்!

பாடியவர்: ஐயூர் முடவனார் ஐயூர் கிழார் எனவும் பாடம் பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. திணை: வாகை. துறை:அரச வாகை. குறிப்பு: 'செம்புற்று ஈயல்போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமருவோர்’ என்னும் செறிவான அறவுரையைக் கூறுவது. -

(பகை மன்னரை வென்று கொள்ளும் வெற்றி மேம்பாட்டினும், கொடை மாண்பினும் மிக்கோன் எனக்கூறி, அவனது வென்றியைச் சிறப்பித்ததனால், அரசவாகை ஆயிற்று)

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின், மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி, 'தண்தமிழ் பொது எனப் பொறாஅன், போர் எதிர்ந்து, 5 கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே, அளியரோ அளியர், அவன் அளிஇழந்தோரே, நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த செம்புற்று ஈயல் போல, 10 ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைத் தடுக்கவொரு தடையும் இல்லை. மிகுந்துவிட்ட நெருப்புக்கு அஞ்சி ஒதுங்க ஒரு 'நிழலும் இல்லை. கொடுங்காற்றை எதிர்க்க ஒரு வலியும் இல்லை. இவற்றைப்போன்று, சினத்துடன் போரிடும் வழுதி, "தண் தமிழ் பொது’ என்ற சொல்லைப் பொறாது போருக்கு எழுந்தா