பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

73


னென்றால், அவனுக்கு எதிர்நிற்பவரும் யாருமிலர். திறை தந்து பணிந்தோர் நடுக்கம் தீர்பவராவர்; பிறரோ, இரங்கத்தக்க நிலையினையே அடைவர். அவர் வாழ்வு, புற்றிலிருந்து எழும் ஈசலின் வாழ்வைப் போன்று, போர்க்கெழுந்த ஒரு பகலுக்குள்ளாகவே, தவறாது அழிந்துபோம்.

சொற்பொருள்:6. கொண்டி-திறை கொள்ளப்படுவது எனும் பொருள்படுவது. 9. சிதலை கரையான். 10. ஈயல் - இறக்கை யுடையதான ஆண்கரையான், ஈசல் எனச் சில பகுதியினர் வழங்குவர்.

52. ஊன் விரும்பிய புலி!

பாடியவர்: மருதன் இளநாகனார்; மருதிள நாகனார் என்பதும் பாடம். பாடப்பட்டோன்: பாண்டியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி. திணை: வாகை. துறை: அரச வாகை. குறிப்பு: நாயும் புலியும் என்னும் வல்லாடல் பற்றிய செய்தி.

(அரசன் எண்ணிய எண்ணியாங்கே செயலாற்றி மேம்படும் சிறப்பினன்' என, அவனது வென்றி மேம்பாட்டையும் அவனது நாடு வளமுடையது எனக் காவன் மேம்பாட்டையும் கூறிச்

. சிறப்பித்தாதலின், அரசவாகை ஆயிற்று.)

அணங்கு உடை நெடுங்கோட்டு அளையகம் முனை.இ, முணங்குநிமிர் வயமான் முழுவலி ஒருத்தல், ஊன்நசை உள்ளம் துரப்ப, இசை குறித்துத் தான்வேண்டு மருங்கின் வேட்டுஎழுந் தாங்கு, வடபுல மன்னர் வாட, அடல் குறித்து, 5

இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி, இதுநீ கண்ணியது ஆயின், இரு நிலத்து யார்கொல் அளியர் தாமே? ஊர்தொறும் மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி வயல் உழை மருதின் வாங்குசினை வலக்கும், 10

பெருநல் யாணரின் ஒரீஇ இனியே கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில், நரைமூ தாளர் நாயிடக் குழிந்த வல்லின் நல்லகம் நிறையப், பல்பொறிக் 15 கான வாரணம் ஈனும் -

காடாகி விளியம் நாடுடை யோரே.

மலைக் குகையினுள்ளே வாழும் ஆண் புலியானது, உணவை விரும்பிப் புறப்பட்டுவிட்டால், எந்த விலங்காயினும் அதனை