பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

75


சிப்பியில் பிறந்த முத்துப் போன்ற வெண்மணல் நிறைந்த முற்றத்தையுடைய கண்கவரும் மாடத்தின்மேல், வளையணிந்த இளமகளிர் தெற்றியாடிக் கொண்டிருப்பர். அத்தகைய விளங்கிலைப் பகைவர் சூழ்ந்தனராக, அவரை வென்று, அதன் துயரைத் தீர்த்தனை. வலிமிகுந்த யானைப் படையையும் குதிரைப் படையையும் உடையவனே பொறையனே! நின்புகழை விரித்துஞ் சொல்ல முடியவில்லை! தொகுத்துஞ் சொல்ல இயலவில்லை! அதனால், மயங்கிய நெஞ்சினனான எனக்கு, ஒருக்காலும் நின்னை வாழ்த்தவும் முடியாது. ‘கல்வி சிறந்தோர் பிறந்த இந்நாட்டிலே, நாமும் வாழோம் என்று போய்விடவும் கூடாது. பல பொருள்களையும் அடக்கிய செய்யுட்களை விரைந்து பாடும் செந் நாவும், மிக்க அறிவும், விளங்கிய புகழும் உடைய கபிலன் இன்றிருந்தால் நல்லது என்று நீ சொன்னாய். அது நன்று! அவரில்லாததால், நின் பகைவரை வெற்றி கொண்ட சிறப்பை என்னால் இயன்றவரை யானே பாடுவேன்; கேட்பாயாக

சொற்பொருள்: 3. தெற்றி - மகளிர் விளையாட்டு. 4 விழுமம் - பகைவரான் வந்த இடும்பை. 6 எஞ்சும் - பொருள் ஒழிவுபடும்.11. செறுத்த - பல பொருளையும் அடக்கிய, 12. வெறுத்த கேள்வி - மிக்க் கேள்வி.15. கடப்பு - வென்றி. மன்: கழிவின்கண் வந்தது.

54. எளிதும் கடிதும்!

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார். பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை திணை: வாகை. துறை: அரச வாகை. -

('அவை புகுதல் இரவலர்க்கு எளிது; நாடு மன்னர்க்குப் புலி துஞ்சுல் வியன் புலத்தற்று' என, அரசனியல்பைக் கூறினர். அதனால், அரச வாகை ஆயிற்று) - * , -

எங்கோன் இருந்த கம்பலை மூதூர், உடையோர் போல இடையின்று குறுகிச், செம்மல் நாளன்வ அண்ணாந்து புகுதல் எம்.அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; - இரவலர்க்கு எண்மை யல்லது, புரவு எதிர்ந்து 5. வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவிகை வண்மைக் கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப், பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி, 10