பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

79


சொற்பொருள்: 2 கணிச்சி-மழுப்படை5.திருமணி-அழகிய நீல மணி. 6. புட்கொடி - கருடக் கொடி, 8. பிணிமுகம் - மயில்; முருகன் ஏறும் யானை என்றும் கூறுப. 9. கால முன்பின் முடிவு காலத்தைச் செய்யும் வலியினையும். 12. வலி - வலியால். வாலியோன் - நம்பி மூத்த பிரானாகிய பலதேவன்; வெண்ணிறம் உடையவன் ஆதலின் வாலியோன் என்றார்.13. இகழுநர் அடுநனை - பகைவரைக் கொல்லும் மாயோனை,14 முருகு - முருகன்.17. ஈயா - ஈந்து. 18. நன்கலம் - நல்ல கப்பல். 20. மகளிர் மடுப்ப - மகளிர் ஊட்ட 21. மதி : அசை

57. காவன்மரமும் கட்டுத்தறியும்! பாடியவர்: காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன். திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி.

(நின் யானைக்குக் கந்து ஆற்றாவாதலால், கடிமரந் தடிதல் ஒம்பு’ எனக் கூறுவார்போற் சந்துசெய்விக்கும் நினைவாற் கூறினமையின், துணைவஞ்சி ஆயிற்று. புகழ்தல் கருத்தாகக் கொள்ளின் பாடாண் திணை, கொற்றவள்ளைத் துறை ஆகும் - (புறத்34, நச்சர்)

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,

புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, -

உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! , \ .

நின்னொன்று கூறுவது உடையேன் என்னெனின்,

நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு . 5

இறங்குகதிர்க் கழனிநின் இளையரும் கவர்க: நனந்தலைப் போரூர் எரியும் நைக்க, - மின்னுநிமிர்ந் தன்ன நின் ஒளிறுஇலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க, என்னது உம் கடிமரம் தடிதல் ஒம்பு நின் - 10 நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே. • . வல்லவரானாலும் அல்லாதவரானாலும் நின்னைப்புகழ்ந்து போற்றியவருக்கு மாயோனைப்போலத் துணைநின்று அருளிக் காக்கும் புகழ் அமைந்தவனே! மாறனே! நின்னிடம் ஒன்று கூற விரும்புகிறேன். பகைவர் நாட்டின்மேல் நீ படையெடுத்துச் செல்லுங் காலத்திலே, விளைவயலை வேண்டுமானாலும் கொள்ளையிடுவாயாக, பேரூர்களையும் எரிவூட்டுவாயாக நின் நெடுவேலால் பகைவரை அழித்துக் கொல்லினும் கொல்லுக. ஆனால், காவல் மரங்களை மட்டும் ஒரு போதும்