பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

புறநானூறு - மூலமும் உரையும்



வெட்டாதிருப்பாயாக. அவை எல்லாம் இளமரங்கள். நின் யானைகளுக்குக் கட்டுத்தறிகளாக அவை ஒருபோதும் பயன்படா: (இவ்வாறு கூறி, அவனைப் போர் நீக்கிச் சமாதானம் பேணத் தூண்டுகிறார் புலவர்; அவன் வலிமையையும் கூறுகின்றார்)

சொற்பொருள்: 6 இறங்கு கதிர் - வளைந்த கதிர். இளையர் - வீரர். நைக்க சுடுக. ஒளிறு பாடஞ் செய்தல்; பாடம் செய்தலாவது வடித்துத் தீட்டி நெய்பூசி உறையிலிட்டு வைத்தல், 9. என்னதும் - யாவதும். 1. கடிமரம் - காவல் மரம். கந்து ஆற்றா நட்டு நிற்கின்ற தறிகள் ஆக மாட்டா.

58. புலியும் கயலும்!

பாடியவர்: காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார். பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும். குறிப்பு: இருவேந்தரும் ஒருங்கிருந்தபோது பாடியது. திணை: பாடாண். துறை: உடனிலை.

(இருவரசர் ஒருங்கே வீற்றிருந்தாரைப் பாடியமையின் உடனிலை ஆயிற்று) .

நீயே, தண்புனற்காவிரிக் கிழவனை; இவனே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத், தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ 5

இளையது ஆயினும் கிளைஅரா எறியும், அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே, அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, . நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளியவென, 10

வரைய சாந்தமும், திரைய முத்தமும், இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும், தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே பால்நிற உருவின் பனைக்கொடியோனும், நீல்நிற உருவின் நேமியோனும், என்று 15 இருபெருந் தெய்வமும் உடன்நின்றாஅங்கு, - உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ? இன்னும் கேண்மின் நும் இசைவாழியவே; . ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் 20