பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

புறநானூறு - மூலமும் உரையும்


கொண்டைக் கூழைத் தண்தழைக் கடைசியர் சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், மலங்குமிளிர், செறுவின் தளம்புதடிந் திட்ட பழன வாளைப் பரூஉக்கண் துணியல் புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக, 5

விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும் வண்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர் தெங்குபடு வியன்பழம் முனையின், தந்தையர் குறைக்கண் நெடும்போர் ஏறி, விசைத் தெழுந்து 10

செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும், வைகல் யாணர், நன்னாட்டுப் பொருநன், எஃகுவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி, சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்.எனின் தாம்அறிகுவர்தமக்கு உறுதி; யாம் அவன் 15 எழு உறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர் - வாழக் கண்டன்றும் இலமே, தாழாது, திருந்து அடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல், அதனினும் இலமே! சென்னியின் சோழ நாடு மருத வளத்தால் மிகுந்தது. கொண்டை முடித்து அதிலே தழையும் செறுகியவராக, உழத்தியர், பயிரிடத்தே வளர்ந்த ஆம்பலும் நெய்தலும் ஆகியவற்றைக் களைந்து ஒதுக்குவர். வயலிடத்தே பொய்கையிற் கிடைத்த பருத்த வாளைமீனைத் துணைக்கறியாகக் கொண்டு, புது நெல்லின் வெண்சோற்றை விலாப் புடைக்கத் தின்று உழவர்கள் மகிழ்வர். அப் பெருந் தீவனத்தால் வயலிலே சூட்டை இடும் இடம் அறியாது தடுமாறுவர். அவர் சிறுவர்களோ, தென்னை நெற்றை விரும்பாது, உயரக் குவிந்த போரின்மீது ஏறி நின்று, பனம்பழம் பறிக்க உந்திக் கொண்டு இருப்பர். இத்தகைய புதுவருவாய் மிகுந்த வளநாட்டின் வேந்தனே! வலிய வேலும், கடிய தேரும் உடையவனே! பன்மலர் மாலை அணிந்த மார்பனான சென்னியே! நின்னோடு மாறுபடுவார் யார்? தமக்கு நேரும் காரியத்தை அவரே அறிந்து அஞ்சி ஒதுங்கி விடுவர். நினக்கு மாறுபட்டோர் வாழவும் கண்டிலோம்! நின் திருவடி பணிந்தோர் வருந்தவும் யாம் கண்டிலோம்! -

சொற்பொருள்: 1. கொண்டைக் கூழை - கொண்டையாகிய தலைமயிர். தழை - குளிர்ந்த தழை. 3. மலங்கு - ஒருவகை மீன். 4. துணியல் - தடியை தசைத் துண்டை. 6. விசிப்ப - விம்ம. 9. முனையின் - வெறுப்பின் 12. யாணர் - புது வருவாய்.