பக்கம்:புறநானூறு-மூலமும் உரையும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

85


பாடியவர்: கழாத் தலையார். பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி. குறிப்பு:போர்ப்புறத்துப் பொருது இவர் வீழ்ந்த காலைப் பாடியது. திணை: தும்பை. துறை: தொகை நிலை.

('வாள் வாய்த்து, இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகை நிலை இது எனக் காட்டுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் (புறத். சூ. 14, 17)

வருதார் தாங்கி, அமர்மிகல் யாவது? - பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக், குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி, நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப், 5 பருந்து அருந்துற்ற தானையொடு, செருமுனிந்து, அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே குடைதுளங்கினவே, உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே; பண்ணுறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞலம் 10

இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக், களங்கொளற்கு உரியோர் இன்றித், தெறுவர, உடன்வீழ்ந்தன்றால், அமரே பெண்டிரும் பாசடகு மிசையார், பனிநீர் மூழ்கார், மார்பகம் பொருந்தி ஆங்கமைந்தனரே 15

வாடாப் பூவின், இமையா நாட்டத்து, நாற்ற உணவினோரும், ஆற்ற அரும்பெறல் உலகம் நிறைய விருந்துபெற்றனரால், பொலிக, நும் புகழே:

போரிட்டு ஒருவரை ஒருவர் வெல்வோம் என்பது எவ்வளவு பேதைமை? பேய்மகளிர் மகிழ்ந்து கூத்தாடப், பருந்துகள் ஊன்தின்று மகிழப், பெரும் போரிட்ட இருபுறத்து மன்னரும் களத்திலே பட்டனர்; அவர் குடைகள் தாழ்ந்தன; முரசுகள் வீழ்ந்தன; ஆயிரம் ஆயிரம் வீரர் செறிந்த படைத் தொகுதி நிரம்பிய அவர் பாசறைகள். ஒருவரும் எஞ்சி இல்லாதவாறு அழிந்தன. அவர் மனைவியர், பச்சிலையும் தின்னாது, நீரும் மூழ்காது, இறந்து கிடக்கும் தத்தம் கணவரின் மார்பைக் கட்டியவாறே, களத்தில் கிடந்தழும் காட்சிதான் எத்துணைக்