பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

புறநானூற்றுச் சிறு கதைகள்


“என்னுடைய வாழ்நாளில் எஞ்சியவற்றை எல்லாம் உனக்கு அளிக்க முடியுமானால் தயங்காமல் அளித்து விடுவேன்.”

“ஏன் அப்படி? வாழ்வில் வெறுப்பா?”

“இல்லை! நான் வாழ்கிற நாட்களையும் சேர்த்துப் பண்ணன் வாழ்ந்தால், அதனால் அன்ன தானமாவது ஒழுங்காக நடை பெறும் இப்படிக் கூறிவிட்டு மீண்டும் பண்ணனை வணங்கி வெளியேறினான் வளவன். பண்ணன் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அனுமானத்துக்கு எட்ட அந்தப் பாணனின் முகத்தை எங்கோ எப்பொழுதோ ஏதோ பெரிய இடத்தில் கண்ட மாதிரி நினைவு வந்தது!

யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய
பாணர் காண்கஇவன் கடும்பின திடும்பை
யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும்,
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்
சோறுடைக் கையர் வீறுவி றியங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும் கண்டு
மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப்
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே (புறநானூறு - 173)

கடும் = சுற்றம், இடும்பை = துன்பம், புள்இமிழ்தல் பறவைகளின் குரல், ஊன் ஒலி = உண்ணும் ஆரவாரம், எழிலி மேகம், ஏய்ப்ப = போல, வீறு வீறு = வரிசையாக, தெற்றென தெளிவாக, அணித்தோ = அருகில் உள்ளதோ, சேய்த்தோ = தொலைவிலுள்ளதோ, வினவுதும்= கேட்கிறோம்.