பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

புறநானூற்றுச் சிறு கதைகள்


ஆனால் பலரைக் கவர்ந்த இந்த அழகனை எதிர்த்துப் போர் செய்யவும் ஒருவன் முளைத்தான். ‘முக்காவல் நாடு’ என்று சோழநாட்டுக்கருகில் ஒரு பகுதி இருந்தது. அதைப் பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒருவன் ஆமூரை ஆண்டு வந்த சிற்றரசன்.

ஆமூரரசன் மற்போரில் வல்லவன். அதனால் அவனை ஆமூர்மல்லன் என்றே சிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தார்கள். ஆமூர் மல்லன் தான் ஒரு சிற்றரசனாக இருந்தும் பேரரசனான போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி அடிக்கடி அவதூறாக இகழ்ந்து பேசி வந்தான்.

இதன் காரணமாகப் போர்வைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனுக்கும் போர் ஏற்பட்டது. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் தந்தைக்குப் பெயர் ‘தித்தன்’ என்பது.கிள்ளியின் போர்த்திறனிலும் வீரத்திலும் அதிக அக்கறை காட்டிப் பெருமை கொள்வது தித்தனின் வழக்கம்.

முக்காவல் நாட்டு ஆமூரில் பெருங்கோழி நாய்கன் என்ற ஒரு செல்வச் சீமான் வாழ்ந்து வந்தான்.பெருங்கோழிநாய்கனுக்கு ஒரே ஒரு மகள். ‘நக்கண்ணை’ என்று பெயர். அவள் மணமாகாதவள். கன்னிமை செழித்து நிற்கும் பருவம். குறுகுறுப்பான சுபாவம். புதுமைக் கட்டமைந்த அழகு. பருவமடைந்து வீட்டிற்குள்ளேயே கன்னிமாடத்தில் இருக்கச் செய்து பாதுகாத்து வந்தார்கள் அவளை.

ஆமூர் நகரத்திற்குள் நுழையும் தலைவாயிலுக்கருகே பிரதானமான வீதியில் அமைந்திருந்தது பெருங்கோழி நாய்கனின் மாளிகை.

ஒருநாள் காலை நேரம். அப்போதுதான் நீராடிவிட்டுக் கன்னிமாடத்திற்குள் நுழைந்திருந்தாள் நக்க்ண்ணை வெண்கலக் கூண்டிலிருந்துதுவாரங்களின் வழியே சுருள் சுருளாகக் கிளம்பும் அகில் புகையில் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். அலை அலையாகப் புரண்ட கருங்கூந்தலுக்கு நடுவே சுருள் சுருளாக